காற்றின் கையெழுத்து
காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 256, விலை 130ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-483-1.html பத்திரிகையாளராக இருந்து பாடலாசிரியராக கவிஞர் பழநிபாரதி எழுதிய 52 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தநூல். சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சகலவிதமான அழுக்குகளையும் சாடும் பழநிபாரதியின் ஆக்ரோஷமான கோபம், படிப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. இதுவே இந்நூலின் வெற்றி. நகரமயமாதல் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும் ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துத் துரத்தி வாங்கும் பின்னணியை காடு வெளையட்டும் பெண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே என்ற தலைப்பில் வேளாண்மை தொடர்பான கட்டுரை நூலாசிரியரின் ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ஒரு பெண்ணின் போராட்டம் அவள் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது என்கிறார் பழநிபாரதி. கருக்கலைப்பு, கள்ளிப்பால், நெல்மணிக் கொலைகளால் எத்தனை அருந்ததிராய், மேதாபட்கர், கே.பி. சுந்தராம்பாள், மதுரை சின்னப்பிளை போன்றவர்கள் காணாமற்போயிருப்பார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார். ஒவ்வொரு கட்டுரையின் கருப்பொருளுக்கேற்ப தமிழ் மற்றும் பிறமொழிக் கவிதைகளில் பொருத்தமானவற்றை வெளியிட்டிருக்கும் உத்தி பாராட்டுக்குரியது. காற்றின் கையெழுத்தாக இருந்தாலும் கல்வெட்டாக நெஞ்சில் பதிந்து நிற்கும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 8/10/2012.
—-
திருக்குறளில் உயிரினங்கள், ரா. நாராயணன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு தெரு, மயிலாப்பூர், சென்னை 4, விலை 50ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-432-4.html வாழ்வியல் நூலான திருக்குறளில் உயிரினங்கள் இடம்பெற்றுள்ள இடங்களை ஆசிரியர் ஆராய்ந்து புத்தகமாக தந்துள்ளார். திருக்குறளை பற்றி ஆய்வு செய்பவர்களக்கு இது மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 5/3/2014.