சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்(மொழி இலக்கிய வளம்), முனைவர் வீ. ரேணுகாதேவி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 112, விலை 95ரூ.

தமிழ்மொழி காலத்தால் பழமையானது மட்டுமல்ல. இலக்கிய வளம் மிக்கதும்கூட என்பதை நிறுவும் ஆய்வு நூல். சங்க இலக்கியங்களில் மலர்கள் குறித்த ஆய்வுக்கு ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் 99 வகையான மலர்கள் பட்டியல் உதவக் கூடும். கடவுள் நம்பிகை, கடவுள் செய்திகள், வழிபாட்டு உணர்வு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல் உள்ளிட்ட சங்ககால நடைமுறைத்தாக்கம் பக்தி இலக்கியங்களில் காணக்கிடைப்பதை ஆய்ந்துள்ளார். வழக்கொழிந்துபோன சங்ககாலச் சொற்களை பொருளுடன் நிரல்படக் குறிப்பிட்டு சங்க காலத் தமிழின் வளத்தை நமக்கு பருகக் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் சங்கத் தமிழ் மொழி வளத்தை இன்றைய மொழி வளர்ச்சியோடு ஒப்பு நோக்கத்தக்க ஆய்வுகள் இவை. ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 5/2/2014.  

—-

பேச்சாளராக அ.கி. பரந்தாமனார் எம்.ஏ, அல்லி நிலையம், சென்னை, பக். 184, விலை 60ரூ.

பேச்சாளராக விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 5/2/2014.  

—-

பட்டுமாமி கிட்டு மாமா, சூடாமணி சடகோபன், கணேஷ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 200, விலை 120ரூ.

நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளைக் கொண்டு பட்டுமாமி, கிட்டுமாமா என்ற கதாபாத்திரங்கள் மூலம் நகைச்சுவையாக அலசும் சிறுகதைகள். நன்றி: குமுதம், 5/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *