நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? , அ.கி. பரந்தாமனார், அல்லி நிலையம், பக்:496, விலை ரூ160. நாம் அன்றாடம் நாளேடுகளில் படிக்கும் செய்திகள் மற்றும் கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றில் ஏதேனும் சில பிழைகள் கண்களில் படக்கூடும். சில செய்திகளில் உள்ள சொற்றொடர்கள் சரியா, தவறா என்ற குழப்பம் ஏற்படும். நாம் சரி என நினைப்பதும், தவறு என நினைப்பதும் சரிதானா என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது? அதற்கு உதவுவதுதான் இந்நூல். கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய அ.கி. பரந்தாமனார் ஒரு நாளேட்டில் வாரம் […]

Read more

கவிஞராக

கவிஞராக, அ.கி. பரந்தாமன், அல்லி நிலையம், பக். 342, விலை 135ரூ. தமிழில் இலக்கியம், இலக்கணம், வரலாறு என அனைத்து நிலைகளிலும் நுண்மாண் நுழைபுலம் மிக்கவரான நூலாசிரியர், தன் மாணாக்கர்களுக்கு கவிதை படைக்கும் ஆற்றலை வளர்க்க கற்பித்ததன் அடிப்படையில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது. பொது இயல், உறுப்பியல் போன்ற ஒன்பது தலைப்புகளிலும், முப்பத்தைந்து உள் தலைப்புகளிலும் கவிதையை, அதன் உருவாக்கத்தை நூலெங்கும் விளக்கியுள்ளார். யாப்பிலக்கணத்தை மையமாக வைத்து கவிதை உருவாக்குவதன் அவசியத்தைமுக்கியமாகக் கூறியுள்ள நூலாசிரியர், புதுக்கவிதை இலக்கணமற்றது என்பதை மறுக்கிறார். யாப்பிலக்கணம் அக்காலம் முதல் […]

Read more

பேச்சாளராக

பேச்சாளராக, அ.கி. பரந்தாமனார், அல்லி நிலையம், பக். 164, விலை 60ரூ. இப்போது பேச்சாளர்கள் பலர் உள்ளனர். இந்த நூல் 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. தமிழகத்தில் மேடைப் பேச்சுக்கலை வளர்ந்து, அதனால் பலரும் மந்திரிகளானது வரலாறு. இந்த நூலில் உள்ள தகவல்களில், பேச்சாளர்களுக்கு நினைவுத் திறன் தேவை. மாசற்ற உடல், நோயற்ற வாழ்வும் தகுதிகள். பிஞ்சிலே பழுப்பவர்களுக்கு, பேச்சுத் நினைவுத் திறன் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவற்றை, இன்றைய பேச்சாளர்கள் படித்தால் நல்லது. நன்றி: தினமலர், 30/3/2014.   —- வீர […]

Read more

சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்(மொழி இலக்கிய வளம்), முனைவர் வீ. ரேணுகாதேவி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 112, விலை 95ரூ. தமிழ்மொழி காலத்தால் பழமையானது மட்டுமல்ல. இலக்கிய வளம் மிக்கதும்கூட என்பதை நிறுவும் ஆய்வு நூல். சங்க இலக்கியங்களில் மலர்கள் குறித்த ஆய்வுக்கு ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் 99 வகையான மலர்கள் பட்டியல் உதவக் கூடும். கடவுள் நம்பிகை, கடவுள் செய்திகள், வழிபாட்டு உணர்வு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல் உள்ளிட்ட சங்ககால நடைமுறைத்தாக்கம் பக்தி இலக்கியங்களில் காணக்கிடைப்பதை ஆய்ந்துள்ளார். வழக்கொழிந்துபோன சங்ககாலச் சொற்களை […]

Read more