பாசங்கள் பலவிதம்

பாசங்கள் பலவிதம், சூடாமணி சடகோபன், ருக்மணி பதிப்பகம், பக். 144, விலை 80ரூ. பாசத்தை மையக்கருவாகக்கொண்டு, பலவிதமான பாசங்களை சிறுகதைகளாக வரைந்துகாட்டியிருக்கிறார் நூலாசிரியர். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆசாபாசங்களின் பின்னணியில் இக்கதைகள் புனையப்பட்டுள்ளன. அதனால் படிப்போருக்கு கதையின் நெருக்கதை உணரும்படி உள்ளது. மனதிற்குள் பல காலங்களாக காரணமின்றி புதைக்கப்பட்டு கிடக்கும் பாசத்தை, வெளியில் கொண்டு வராததால் அல்லது கொண்டுவரத் தெரியாததால், அவன் அடையும் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் யதார்த்த கண் கொண்டு பார்த்துள்ளார் ஆசிரியர். மகனிடம் அன்பு காட்டத்தவறிய சொக்கலிங்கம் முதல், நோய் […]

Read more

சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்(மொழி இலக்கிய வளம்), முனைவர் வீ. ரேணுகாதேவி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 112, விலை 95ரூ. தமிழ்மொழி காலத்தால் பழமையானது மட்டுமல்ல. இலக்கிய வளம் மிக்கதும்கூட என்பதை நிறுவும் ஆய்வு நூல். சங்க இலக்கியங்களில் மலர்கள் குறித்த ஆய்வுக்கு ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கும் 99 வகையான மலர்கள் பட்டியல் உதவக் கூடும். கடவுள் நம்பிகை, கடவுள் செய்திகள், வழிபாட்டு உணர்வு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல் உள்ளிட்ட சங்ககால நடைமுறைத்தாக்கம் பக்தி இலக்கியங்களில் காணக்கிடைப்பதை ஆய்ந்துள்ளார். வழக்கொழிந்துபோன சங்ககாலச் சொற்களை […]

Read more