பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை ,  சுவாமி கமலாத்மானந்தர்,  ஸ்ரீராமகிருஷ்ண மடம், பக்.279, விலை ரூ.200.    ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளை நிகழ்த்திய புனித இடம் பிருந்தாவனம் பிருந்தாவன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தருவதுடன், அங்கிருக்கும் கோயில்கள், மலைகள், புனித தீர்த்தங்கள் என அனைத்தையும் பற்றிய விவரங்களையும் வண்ணப் படங்களுடன்மிக உயர்ந்த வழுவழுப்பான தாளில் தருகிறது இந்நூல். ஸ்ரீகிருஷ்ணர், ராதாராணி, கோபிகைகள் ராசலீலை நடந்த போதெல்லாம் ஸ்ரீகிருஷ்ணரின் குண்டலினி சக்தி சகஸ்ராரத்தை அடைந்திருந்தது என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதைப் பதிவிட்டதுடன், ராசலீலை சமயத்தில் எப்போதும் ஸ்ரீகிருஷ்ணரின் மனம் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார்

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார், சுவாமி கமலாத்மனாந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ. இந்திய தேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம், சமய சமரசம், பெண்களின் மேன்மை போன்றவற்றில் சுவாமி விவேகானந்தருக்கும் மகாகவி பாரதியாருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பல மேற்கோள்களுடன் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் பற்றி பாரதியார் எழுதிய பல கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடிய அவரது ஆங்கில கட்டுரைகளும் இதில், இடம் பெற்றுள்ளன. விவேகானந்தர் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் பாரதியார் வெளியிட்ட 75 மேற்கோள்கள், பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பில் அவர் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3, சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ. விவேகமும் வீரமும் நிறைந்த சுவாமி விவேகானந்தரின் உரைகளில் தெய்வ பக்தியும் தேசபக்தியும் ஒன்று கலந்தே ஒலித்தது. அவற்றுக்கு எதிரொலியாகவே எழுந்தவை மகாகவியின் கவிதைகளும் கட்டுரைகளும். அஞ்ஞானம் என்ற இருளில் இருந்து மக்களை விழித்தெழச் செய்யும் வகையில் அமைந்த அவர்கள் இருவரின் கருத்துகளையும் தேடித் தொகுத்துத் தரப்பட்டிருக்கும் அற்புதமான நூல் இது. பாரதியார் தமது கட்டுரைகள் பலவற்றிலும் சுவாமி விவேகானந்தர் குறித்து சொன்னவற்றைத் தொகுத்திருப்பதோடு, இருவர் […]

Read more

டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5)

டாலர் அரசனும் ஆசை அரசியும் (தொகுதி 5), பாமதி மைந்தன், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 48ரூ. பரந்த உலகில் பார்க்கும் காட்சிகள் எல்லாமே ஒவ்வொரு பாடம் சொல்லும். நாம்தான் அதனை கவனிப்பதில்லை. அந்த உண்மையே கருவாகி, கற்பனையில் கதைகளாகி, உருவெடுத்து நற்பண்புகளும் நல்லொழுக்கமும், பக்தியும் வளர்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணத்தில் படித்து முடித்தாலும் மனத்தில் பல கணங்கள் தங்கி கனக்கச் செய்யும் சிறப்பான கதைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

எழுச்சி பெறு யுவனே

எழுச்சி பெறு யுவனே, தொகுப்பாசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 324, விலை 125ரூ. பெரும் இளைஞர் சக்தியைக் கொண்ட நம் நாட்டில், அவர்களை வழி நடத்துவது யார் என்பது மிகப் பெரிய கேள்வி. இன்றைய இளைஞர்களில் சிலர் தவறான பாதையில், செல்வதற்கான ஈர்ப்புகள், திசை திருப்பல்கள் அதிகம். ஒட்டுமொத்த இளைஞர் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. எனவே ஒட்டுமொத்த இளைஞர் சக்தியும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கான முயற்சியாக இந்நூல் அமைந்திருக்கிறது. வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கின்ற, சாதித்த, […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 440, விலை 200ரூ. மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், 19ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் சிந்தனையாளர்களில் ஒருவர். இவர் ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், கலை, பெண்கள் முன்னேற்றம், பாமரர் முன்னேற்றம், மானிட முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், அரசியல் சிந்தனைகள், தேச முன்னேற்றம், விடுதலை வேட்கை, உலகம் தழுவிய கொள்கைகளின் வீச்சு… போன்ற உயர்ந்த சிறந்த சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் கொண்ட வேதாந்தி. […]

Read more

மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 124, விலை 45ரூ. பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், வெளிவந்திருக்கும் இந்த நூல் கவனம் பெறுகிறது. இந்த நூலில், மாணவர்களுக்கு அடிக்கடி வரும் சந்தேகங்கள், கேள்விகள் என்னென்ன என்பதையும், அதற்கான தெளிவான பதில்களையும், ஆசிரியர் கூறியுள்ளார். பதில்கள், ஓர் ஆசிரியர் கூறுவது போல் அல்லாமல், ஓர் அண்ணன் தன் தம்பி, தங்கைகளுக்கு சொல்வதுபோல அளிக்கப்பட்டுள்ளன. பயம் இல்லாமல் பரீட்சை எழுதுவது எப்படி, எப்படி படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம், […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 500, விலை 200ரூ. இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாயகரான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலரிடமும் இருந்தது. அவர்களுள் மகாகவி பாரதியார் முதன்மையானவர். விவேகானந்தரும் பாரதியாரும் நேரில் சந்தித்ததில்லை என்றபோதும், இவ்விருவரின் சிந்தனையும் கருத்துகளும் ஒத்திருப்பதைக் காண முடிகிறது. இருவரும் ஆன்மிக அடிப்படையில்தான் இந்தத் தேசம் உயர்வடையும் என்ற நம்பிக்கையை வலுவாக முன்வைத்தவர்கள். பாரதியாரின் கவிதைகள் பேசப்படும் அளவுக்கு அவரது இதழியல் பணிகள் […]

Read more

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, முனைவர் பி. யோகீசுவரன், நீலா பதிப்பகம், சென்னை, பக்கம் 344, விலை 175 ரூ. விடுதலை பெற்ற பின்னர் சுதந்திர இந்தியாவில், மொழிவாரி மாநில மறு சீரமைப்பு நடந்தபோது, தமிழ்நாட்டின் வடக்கெல்லை, தெற்கெல்லையில் தமிழர்கள் வாழ்ந்த மிகப்பெரிய நிலப்பரப்புகளை ஆந்திரத்துடனும், கேரளத்துடனும் இணைக்கும் அநீதி நிகழ்ந்ததையும், அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பெற்றதையும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதையும் நாடறியும். அப்போது நிகழ்ந்த தெற்கெல்லை மீட்புப் போராட்ட வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கும் விதமாக, இந்த நூல் எழுதப்பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தை […]

Read more