சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3
சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3, சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ.
விவேகமும் வீரமும் நிறைந்த சுவாமி விவேகானந்தரின் உரைகளில் தெய்வ பக்தியும் தேசபக்தியும் ஒன்று கலந்தே ஒலித்தது. அவற்றுக்கு எதிரொலியாகவே எழுந்தவை மகாகவியின் கவிதைகளும் கட்டுரைகளும். அஞ்ஞானம் என்ற இருளில் இருந்து மக்களை விழித்தெழச் செய்யும் வகையில் அமைந்த அவர்கள் இருவரின் கருத்துகளையும் தேடித் தொகுத்துத் தரப்பட்டிருக்கும் அற்புதமான நூல் இது.
பாரதியார் தமது கட்டுரைகள் பலவற்றிலும் சுவாமி விவேகானந்தர் குறித்து சொன்னவற்றைத் தொகுத்திருப்பதோடு, இருவர் உரைகளிலும் உள்ள ஒப்புமைகள் குறித்த விளக்கங்களையும் சுவை குன்றாமல் தந்திருக்கிறார் நூலாசிரியரான மதுரை இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர்.
பகவான் ஸ்ரீராமகிருண்ஷரைப் பற்றியும், விவேகானந்தர், சகோதரி நிவேதிதை, மகாத்மா காந்தி என்று ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்துடன் தொடர்புடைய பலரைப் பற்றியும் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த கட்டுரைகளும் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. படித்துப் பயனடைவதோடு, பாதுகாக்கவும் வேண்டிய புத்தகம். முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து வந்திருக்கும் மூன்றாவது பாகம் இது.
நன்றி: குமுதம், 14/3/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026799.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818