பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை ,  சுவாமி கமலாத்மானந்தர்,  ஸ்ரீராமகிருஷ்ண மடம், பக்.279, விலை ரூ.200.    ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளை நிகழ்த்திய புனித இடம் பிருந்தாவனம் பிருந்தாவன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தருவதுடன், அங்கிருக்கும் கோயில்கள், மலைகள், புனித தீர்த்தங்கள் என அனைத்தையும் பற்றிய விவரங்களையும் வண்ணப் படங்களுடன்மிக உயர்ந்த வழுவழுப்பான தாளில் தருகிறது இந்நூல். ஸ்ரீகிருஷ்ணர், ராதாராணி, கோபிகைகள் ராசலீலை நடந்த போதெல்லாம் ஸ்ரீகிருஷ்ணரின் குண்டலினி சக்தி சகஸ்ராரத்தை அடைந்திருந்தது என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதைப் பதிவிட்டதுடன், ராசலீலை சமயத்தில் எப்போதும் ஸ்ரீகிருஷ்ணரின் மனம் […]

Read more

நீதிக் கதைகள்

நீதிக் கதைகள்,  சுவாமி கமலாத்மானந்தர், வெளியீடு: ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், விலை ரூ.70. இந்நுாலில், ‘10 ரூபாய் பெறாத சிலை ஒன்றை, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய கலைப்பொருள் ஆர்வலர் முட்டாள்’ என்று நினைத்துக் கொண்டார் உழவன். ‘விலை மதிக்க முடியாத இந்த செப்புச் சிலையை வெறும், 10 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்த உழவன் முட்டாள்’ என்று நினைத்துக் கொண்டார் கலைப்பொருள் ஆர்வலர் என, ஒரு கதை தெரிவிக்கிறது. இரு வேறு மனநிலையை சிறுவர்களின் மனதில் பதிய வைக்கும் வகையில், இந்த கதை […]

Read more

நீதிக்கதைகள்

நீதிக்கதைகள், சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பக். 246, விலை 80ரூ. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து நீதிக் கதைகள் நான்காம் தொகுப்பை எழுதியிருக்கிறார், மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர். எத்தனையோ நீதிக் கதைகளை படித்திருந்தாலும், இதில் உள்ள நீதிக் கதைகளை படிக்கும் போது, நமக்கு அந்தளவுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படுவது உறுதி. நீதிக் கதைகள் ஒவ்வொன்றையும் படிக்க அலுப்பு தட்டாத வகையில் தொகுத்து தந்துள்ளார். மகாபலிக்கு மகாலட்சுமி கட்டிய ரக் ஷை கயிறு, திருவிளையாடற்புராணத்தில் வரகுண பாண்டியனின் […]

Read more

பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை,  சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக்.276, விலைரூ.200. நம்நாட்டில் தீர்த்த யாத்திரை செல்லும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் அயோத்தி, பிருந்தாவன் யாத்திரைகள் மிகவும் புனிதமானவை. அவை இரண்டும் கடவுள் வாழ்ந்த இடம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த புண்ணிய பூமிகளான பிருந்தாவனம், மதுரா, கோகுலம், நந்தகாம், பர்ஸானா, கோவர்த்தன் மலை ஆகிய ஆறு இடங்களும் சேர்த்தே ‘பிருந்தாவன்‘ அல்லது ‘விரஜ மண்டலம்‘ என்று அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிருந்தாவனுக்கு மூன்று முறை செல்லும் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3, சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ. விவேகமும் வீரமும் நிறைந்த சுவாமி விவேகானந்தரின் உரைகளில் தெய்வ பக்தியும் தேசபக்தியும் ஒன்று கலந்தே ஒலித்தது. அவற்றுக்கு எதிரொலியாகவே எழுந்தவை மகாகவியின் கவிதைகளும் கட்டுரைகளும். அஞ்ஞானம் என்ற இருளில் இருந்து மக்களை விழித்தெழச் செய்யும் வகையில் அமைந்த அவர்கள் இருவரின் கருத்துகளையும் தேடித் தொகுத்துத் தரப்பட்டிருக்கும் அற்புதமான நூல் இது. பாரதியார் தமது கட்டுரைகள் பலவற்றிலும் சுவாமி விவேகானந்தர் குறித்து சொன்னவற்றைத் தொகுத்திருப்பதோடு, இருவர் […]

Read more

ஊஞ்சல்

ஊஞ்சல், உமா ஜானகிராமன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, பக். 122, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-325-7.html ஆசிரியை உமா ஜானகிராமன் இரக்கம் மிகுந்தவர் என்பது, இந்தத் தொகுதியைப் படிக்கும்போது தெரிகிறது. மேல்நாட்டு மருமகளை வெறுக்கும் ஒரு சாதிரிகள், கடைசியில் அவள் அன்பின் ஆழத்தைக் கண்டு சிலிர்க்கும் மேன்மையைச் சொல்லும் புத்திர சோகம் இதிலுள்ள சிறந்த கதை. மேடுகள் பள்ளங்கள் என, பல நேர்த்தியான சிறுகதைகள் அடங்கிய சிறந்த தொகுதி. […]

Read more

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார் பேட்டை, சென்னை 18, விலை 40ரூ To buy this Tamil book onnline – www.nhm.in/shop/978-81-8493-625-4.html உலகையே மலைக்க வைத்த ஊழல். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு பெரும் அதிர்ச்சி தோல்விக்குக் காரணமாக இருந்த ஊழல். இதையும் மிஞ்சி ஒரு ஊழல் உலகில் இனி நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் ஊழல்… என்று பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஊழல். ஸ்பெக்ட்ரம் ஊழல், சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் […]

Read more