பிருந்தாவன் யாத்திரை
பிருந்தாவன் யாத்திரை , சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், பக்.279, விலை ரூ.200.
ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளை நிகழ்த்திய புனித இடம் பிருந்தாவனம் பிருந்தாவன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தருவதுடன், அங்கிருக்கும் கோயில்கள், மலைகள், புனித தீர்த்தங்கள் என அனைத்தையும் பற்றிய விவரங்களையும் வண்ணப் படங்களுடன்மிக உயர்ந்த வழுவழுப்பான தாளில் தருகிறது இந்நூல்.
ஸ்ரீகிருஷ்ணர், ராதாராணி, கோபிகைகள் ராசலீலை நடந்த போதெல்லாம் ஸ்ரீகிருஷ்ணரின் குண்டலினி சக்தி சகஸ்ராரத்தை அடைந்திருந்தது என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதைப் பதிவிட்டதுடன், ராசலீலை சமயத்தில் எப்போதும் ஸ்ரீகிருஷ்ணரின் மனம் ஆன்மிகத்தின் எவரெஸ்ட் என்று சொல்லத்தக்க நிர்விகல்ப சமாதி நிலையில் இருந்தது என்கிறார் சுவாமி கமலாத்மானந்தர்.
பிருந்தாவனத்தில் உள்ள காத்தியாயனி பீடம், கோபேஸ்வர் சிவன் கோயில்,பிரேம் மந்திர், இஸ்கான் மந்திர் முதலிய 19 முக்கிய கோயில்களையும்; மதுராவில்உள்ள ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமி, கோகுலம், ராவல் (ராதை பிறந்த இடம்)முதலிய7 முக்கிய இடங்களையும்; விரஜாவில் உள்ள நந்தகாம், பர்ஸானா, கோவர்த்தன மலை, ராதா குண்டம் முதலிய 4 முக்கிய இடங்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும் என்றும்நூலில் கூறப்பட்டுள்ளது.
பிருந்தாவனத்தில் இருந்த வரைக்கும் ஸ்ரீகிருஷ்ணர் தம் காலில் செருப்பு அணியவில்லை, தைத்த துணியை உடுத்தவில்லை, தன் கையில் ஆயுதம் ஏந்தவில்லை என்பனபோன்ற தகவல்களும் உள்ளன.
இந்நூல், இந்துக்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். பிருந்தாவன் செல்வோருக்கு சிறந்த வழிநடைக் கையேடு.
நன்றி: தினமணி, 15/3/2021.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000027119_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818