சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 4, தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக்.552, விலை ரூ. 200. சுவாமி விவேகானந்தர் குறித்த மிக உயர்ந்த அபிமானம் கொண்டவராக பாரதி விளங்கினார். தான் நடத்திய பத்திரிகைகளிலும் பணிபுரிந்த பத்திரிகைகளிலும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விவேகானந்தரைப் போற்றி மகிழ்கிறார் பாரதி. அதுமட்டுமல்ல, விவேகானந்தரின் சீடர்களான சுவாமி அபேதானந்தரையும் சகோதரி நிவேதிதையையும், அவரது சகோதரர் பூபேந்திரரையும் தனிப்பாடல் புனைந்து வழிபட்டவர் பாரதி. மகாத்மா காந்தி, திலகர், நேதாஜி போன்ற பிற தேசியத் தலைவர்களைப் […]

Read more

பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை,  சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக்.276, விலைரூ.200. நம்நாட்டில் தீர்த்த யாத்திரை செல்லும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் அயோத்தி, பிருந்தாவன் யாத்திரைகள் மிகவும் புனிதமானவை. அவை இரண்டும் கடவுள் வாழ்ந்த இடம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த புண்ணிய பூமிகளான பிருந்தாவனம், மதுரா, கோகுலம், நந்தகாம், பர்ஸானா, கோவர்த்தன் மலை ஆகிய ஆறு இடங்களும் சேர்த்தே ‘பிருந்தாவன்‘ அல்லது ‘விரஜ மண்டலம்‘ என்று அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிருந்தாவனுக்கு மூன்று முறை செல்லும் […]

Read more

சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு

சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், விலை 275ரூ. சகோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். 150 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பிறந்தவர். இவருக்கு “நிவேதிதை” என்ற பெயரை அளித்தவர் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகப் புதல்வி நிவேதிதை என்றால், மகாகவி பாரதியாருக்கு ஆன்மிக குரு என்று கூறலாம். பிறப்பால் மேல்நாட்டுப் பெண் என்றாலும், இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக்கொண்டவர். அவர் வரலாற்றைப் படிப்பது, இந்தியாவின் அரசியல் வரலாற்றையும், ஆன்மிக வரலாற்றையும் சேர்த்துப் படிப்பதற்கு சமம். அழகாகவும், விரிவாகவும் அமைந்துள்ள […]

Read more

மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 124, விலை 45ரூ. மாணவர்களின் படிப்பு, திறன், ஆர்வம் முயற்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் கேள்விகளுக்குப் பதில்க எழுதப்பட்ட நூல். எல்லா நிலையில் உள்ள மாணவர்களுக்கும் படிப்பதற்கு தேவையான பல்வேறு டிப்ஸ்கள் இந்நூலில் உள்ளன. மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதற்குத் தீர்வு காணவும் உதவும் நூல். நன்றி: குமுதம், 5/4/017.

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 2, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 514, விலை 200ரூ. மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவராக தொண்டாற்றி வரும் இந்நூலாசிரியன் சீரிய முயற்சியினால், இரண்டாண்டுகளுக்கு முன் இந்நூலின் முதல் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்நூலின் 2-ஆம் பாகமும் அவரால் தொகுக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. மகான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், ஆன்மிகம், இந்திய விடுதலைப் போராட்டம், பெண்கள் முன்னேற்றம், சமூக […]

Read more

உங்கள் கேள்விகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்கள்

உங்கள் கேள்விகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 182, விலை 65ரூ. மோட்சத்தை நாடும் மனிதன் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை இறைவனிடம் கேள்விகளாகக் கேட்கிறான். தகுந்த குருவை அடைந்து அவரிடம் பணிவுடன் கேள்வி கேட்க வேண்டும் என்று உபநிஷதங்களும் பகவத் கீதைகளும் கூறுகின்றன. அந்த வகையில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது சீடர்களுக்கு எழும் சந்தேகங்களை நீக்கி அமுத மொழியாக அருளியுள்ளார். அதிலிருந்து பக்தர்கள் பல சூழநிலைகளில் கேட்ட கேள்விகளுக்கு ராமகிருஷ்ணர் தந்த பதில்களின் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், […]

Read more

ஆசிரியர்களே அச்சாணிகள்

ஆசிரியர்களே அச்சாணிகள், தொகுப்பாசிரியர் சுவாமி வி. மூர்த்தானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 216, விலை 75ரூ. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவர்கள் மாணவர்கள். அந்த மாணவர்களை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள். சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை மிக எளிமையாகக் கூறும் நூல். உண்மையான கல்வி எது? என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. கல்வி – சமூகம் – ஆசிரியர் – மாணவர் தொடர்பான 36 கட்டுரைகளை பல்துறை அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர். பிள்ளைகளை எவ்வளவு வேண்டுமானாலும் கண்டிக்கலாம், ஆனால் தண்டிக்கவே கூடாது. […]

Read more

தமிழ் அறிவோம்

தமிழ் அறிவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-848-1.html தமிழ்மொழியின் தனித்தன்மை, அழகு, மேன்மை சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக நின்று பணிகள் ஆற்றும் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய நூல் இது. தன்னேரிலாத தமிழ் எனத் தொடங்கி, இருந்தமிழே உன்னால் இருந்தேன் என முடியும் 32 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தமிழ் எழுதும்போதும், பேசும்போதும் ஏற்படக்கூடிய ஐயங்களுக்கு விடையும் விளக்கமும் தரப்பட்டுள்ளது. பிறமொழிக் கலப்பு எவ்வாறு தமிழ் […]

Read more

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 481, விலை 100ரூ. சுவாமி விவேகானந்தர் தம்மையும் தமது வாழ்க்கை நிகழ்வுகளையும் பற்றி எழுதியுள்ள மிக அரிதான நூல் இது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக விவேகானந்தர் ஆனதும், தன் குருவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அவர் விவரிப்பதும் ஒரு ஆன்மிக நாவல்போல் விரிகிறது. சிகாகோ சர்வதேச மகாசபையில் அவர் ஆற்றிய உரையும் அவர் இந்தியாவிற்குத் திரும்பி வர வேண்டிய அவசியமும் படிக்கும்போது நம் உடலில் ஒரு புது உணர்வு எழுகிறது. […]

Read more

சுவாமி விவேகானந்தர் (விரிவான வாழ்க்கை வரலாறு)

சுவாமி விவேகானந்தர் (விரிவான வாழ்க்கை வரலாறு), சுவாமி ஆகதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 754+69, தொகுதி 1-220ரூ, தொகுதி 2-200ரூ. சுவாமி விவேகானந்தரின் வரலாறு தமிழில் விரிவாக வரவேண்டும் என்ற எண்ணற்றோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்நூல் வந்துள்ளது. இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்கள். மகாசமுத்திரத்திற்கு இணையான சுவாமிஜியின் வரலாற்றை இந்த இரணடு தொகுதிகளுக்குள் அடக்க முடியாதுதான் என்றாலும் விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது கருத்துககளுக்கும் இந்நூலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் படிப்போர்க்கு மன நிறைவைத் தருகின்றன. அவரது […]

Read more
1 2