தமிழ் அறிவோம்

தமிழ் அறிவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-848-1.html தமிழ்மொழியின் தனித்தன்மை, அழகு, மேன்மை சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக நின்று பணிகள் ஆற்றும் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய நூல் இது. தன்னேரிலாத தமிழ் எனத் தொடங்கி, இருந்தமிழே உன்னால் இருந்தேன் என முடியும் 32 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தமிழ் எழுதும்போதும், பேசும்போதும் ஏற்படக்கூடிய ஐயங்களுக்கு விடையும் விளக்கமும் தரப்பட்டுள்ளது. பிறமொழிக் கலப்பு எவ்வாறு தமிழ் மொழியைக் கெடுக்கிறது என, விளக்கியதோடு, பல வேற்றுச்சொற்களுக்கு நல்ல தமிழ்ச் சொற்கள் தந்துள்ளார் ஆசிரியர். தமிழ் மீது ஆர்வமும், அக்கறையும் கொண்டவர் அனைவரும் படிக்க வேண்டிய நூல். -ஜவகர். நன்றி: தினமலர், 9/3/2014.  

—-

குரு விவேகானந்தர், சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை.

பாரத தேசத்திற்கு புத்துயிர் தந்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் பிறந்த 150வது ஆண்டு கொண்டாட்டத்தின் நினைவாக ராமகிருஷ்ண மடம் இந்த சிந்தனை அமுத நூலை அழகுடன் வழங்கியுள்ளது. சுவாமிஜியின் சீடர்களின் வாழ்வில் நிகழ்ந்த 100 சம்பவங்கள், படிப்பவரின் மனதை ஆட்கொள்கின்றன. சுவையான சில செய்திகள் உலக நாடுகளைப் பற்றிய தீர்க்க தரிசனம், இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெறும். சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியா மேலை நாடுகளின் புராதன பாரம்பரிய பெருமையை இந்தப் புதிய பாரதம் கெடுத்துவிடும். அதே வேளையில் அமெரிக்கா முதலிய நாடுகள் படிப்படியாக ஆன்மிகமயமாகும்(பக். 17). இறந்த குழந்தையைத் தன் தவத்தின் மூலம் சுவாமிஜி சக்தி சஞ்சாரம் செய்து பிழைக்க வைத்த சம்பவம் படிப்பவர் நெஞ்சில் புதிய மின்னலையை உருவாக்கும். -மா.கி.ராமணன். நன்றி: தினமலர், 9/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *