இது கதையன்று வாழ்க்கை

இது கதையன்று வாழ்க்கை, கவிக்கோ ஞானச்செல்வன், எழில் நிலையம், விலை 140ரூ. தமிழ் வாழ்ககை நல்ல தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நூல்களைப் படைத்தவர். ஊடகங்களில் தமிழ் படும்பாட்டை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுட்டித் திருத்திக்கொண்டே இருப்பவர். சிலம்புச் செல்வர் ம.பொசியின் அணுக்கர், கவிக்கோ ஞானச்செல்வன் அண்மையில் எழுதி வெளியாகி இருக்கும் நூல் ‘இது கதையன்று வாழக்கை’. ஏற்கெனவே தன் வரலாற்று நூலொன்றை வெளியிட்டிருக்கும் இவர் இந்நூலில் அதில் விடப்பட்ட பல செய்திகளை தூயதமிழில் இனிமையாக சொல்லிச்செல்கிறார். பெரும்பாலும் தமிழ் இலக்கிய […]

Read more

இன்றும் இனிக்கிறது நேற்று

இன்றும் இனிக்கிறது நேற்று,  கவிக்கோ ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், பக்.216. விலை ரூ.150. இஃது ஒரு தன் வரலாற்று நூல். நூலாசிரியரின் அறுபதாண்டு தமிழ்ப்பணியில் அவருக்கு நேரிட்ட சில நிகழ்வுகளைப் பற்றிய, அவர் சந்தித்த சில மனிதர்களைப் பற்றிய தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று எம்.ஜி.ஆர். கையால் இந்நூலாசிரியர் பொற்பதக்கம் பெற்ற நிகழ்வோடு தொடங்குகிறது இந்நூல். மதுக்கூர் என்ற சிற்றூரில் நடந்த நூலாசிரியரின் திருமணத்திற்கு ம.பொ.சி. நேரில் வந்து வாழ்த்திப் பேசியது, நூலாசிரியர் ஒரத்தநாடு […]

Read more

தமிழில் அறிவியல் புலம்

தமிழில் அறிவியல் புலம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், இதழ்களும் தமிழ் மொழியில் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டி, இடித்துரைத்துத் தெளிய வைக்கிறார். நூலைப் படிப்போர் தமிழின் சிறப்புகளை உணர்வர். தெ.பொ.மீ., மு.வ., ராதாகிருஷ்ணன் ஆகிய பேராசிரியர்கள், கவிஞர் வாலி ஆகியோர் பற்றிய அவர்தம் கருத்துகள் நூலில் ஒளிர்கனிற்ன. பன்மொழிப் புலமைமையில் மு.வ., அவர்களைத் தெ.பொ.மீ. யோடு நிகராக்க இயலாது என, குறிப்பிட்டுள்ளமை, மனத்தை தொடுகிறது. ஆங்காங்கே நூலாசிரியரின் தன் வரலாற்றுச் செய்திகளையும் காண்கிறோம். பெயர் சுட்டப் […]

Read more

வடலூர் வாய்மொழி

வடலூர் வாய்மொழி, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. To buy this Tami book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-8.html பேரறிஞர் சாமி சிதம்பரனார், பல சிறந்த ஆய்வு நூல்களையும், இலக்கிய சமய நூல்களையும் ஏறத்தாழ 60 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்துள்ள மூதறிஞர். இந்நூல் 1959ல் எழுதி வெளிவந்த  நூல். ராமலிங்கர் வரலாறு எனத் துவங்கி 41 அத்தியாயங்களில் உண்மைக்கு வெற்றி என்ற தலைப்போடு நூல் நிறைவடைகிறது. வடலூர் வள்ளற் பெருமான் பாடல் வரிகள் மேற்கோள்களோடு, ராமலிங்கரது கொள்கைகளையும், […]

Read more

தமிழ் அறிவோம்

தமிழ் அறிவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-848-1.html தமிழ்மொழியின் தனித்தன்மை, அழகு, மேன்மை சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக நின்று பணிகள் ஆற்றும் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய நூல் இது. தன்னேரிலாத தமிழ் எனத் தொடங்கி, இருந்தமிழே உன்னால் இருந்தேன் என முடியும் 32 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தமிழ் எழுதும்போதும், பேசும்போதும் ஏற்படக்கூடிய ஐயங்களுக்கு விடையும் விளக்கமும் தரப்பட்டுள்ளது. பிறமொழிக் கலப்பு எவ்வாறு தமிழ் […]

Read more

சிலம்பின் பரல்கள்

சிலம்பின் பரல்கள், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. சிலப்பதிகாரத்திலும், சிலம்புச் செல்வரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இந்நூலாசிரியர். சிலப்பதிகார காப்பியத்தின் சுவையையும், சிறப்புகளையும், கதைச் சுருக்கத்தையும் கொண்டது இந்நூல். சிலம்பினை கற்கச் சிறந்த நூல் இது என்று பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் மதிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பரலும், ஒரு தொடுக்கப்பட்ட மாலைதான். பதினாறு தலைப்புகளில் சிலப்பதிகார தோட்டத்தில் மறைந்துகிடக்கும் மனோரஞ்சித மலர்களையும் வெளிக்கொணர்கிறார் ஆசிரியர் என்று முனைவர் தி. ராசகோபாலன் பாராட்டியுள்ளார். சிலப்பதிகார காப்பியத்தில் முத்தமிழும் கொஞ்சிக் குலவுகின்ற அழகையும், […]

Read more

வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html சுஜாதா, அம்பலம் மின்னிதழிலும் கல்கி வார இதழிலும் எழுதிய பாசுர அறிமுகங்களின் தொகுப்பு இந்த நூல். தமிழ் அழகும் பக்தி ரசமும் சொட்டும் அழகிய பாசுரங்களுக்கு நவீன பாணியில், மொழியில் உரை எழுதியுள்ள சுஜாதா, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல அரிய தமிழ்ச் சொற்களையும் அறிமுகப்படுத்துகிறார். அவருக்கு விருப்பமான பாசுரங்களை எடுத்துக்கொண்டு அதன் இலக்கிய தன்மையை மையப்படுத்தி, ஆழ்வார்களின் பக்திப் பெருக்கை உயர்த்திப் பிடித்து, […]

Read more