தொடுவானம் தேடி

தொடுவானம் தேடி, அ.தில்லைராஜன், கோ. அருண்குமார், சஜிமேத்யூ, வானவில் புத்தகாலயம், விலை 299ரூ. இளைய சமுதாயத்தினர் பலர், சுயசார்புடன் தொழில் முனைவர்களாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் வகையில் இந்த நூல் திகழ்கிறது. சிறு, குறு தொழில்களை எவ்வாறு முன்னெடுப்பது, அவற்றை வெற்றிகரமாக நடத்த உதவும் வணிக உத்திகள் என்ன, நிதி உதவி திரட்டுவது எவ்வாறு, தொழில் நடத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்ன, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது போன்ற அனைத்து அம்சங்களும் இந்த நூலில் எளிய […]

Read more

தொடுவானம் தேடி

தொடுவானம் தேடி,  அ.தில்லைராஜன், கோ.அருண்குமார், சஜி மேத்யூ,  வானவில் புத்தகாலயம், பக்.264,  விலை ரூ.299.  தொழில், வணிகம் உலகமயமாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகெங்கும் தமது வேர்களை ஆழமாக ஊன்றி வருகின்றன. இந்நிலையில் அவற்றிற்கிசைவாக, அவற்றின் ஒரு பகுதியாக இங்குள்ள சிறு, குறு தொழில்கள் இருக்க வேண்டிய தேவை உள்ளது. சிறு, குறு தொழில் நடத்துபவர்கள் நவீன தொழில், வணிக மேலாண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆனால், நமது நாட்டில் சிறு, குறு தொழில், வணிகச் செயல்முறைகள் அனுபவம் சார்ந்தே உள்ளன. அறிவியல்பூர்வமான […]

Read more

மானுட வாசிப்பு

மானுட வாசிப்பு, தொகுப்பாசிரியர் தயாளன், வானவில் புத்தகாலயம், பக். 120, விலை 112ரூ. தமிழக பண்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் தொ.பரமசிவம். தமிழகத்தில் அறிவு எழுச்சி பற்றி, தயாளனும், சண்முகானந்தமும் அவருடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு நூல். பண்பாட்டு, கல்வி, அரசியல், நாட்டார் வழக்காற்றியல், சுற்றுச்சூழல், சித்தர் இலக்கியம் என பல தளங்களில் உரையாடல் நடத்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் ஒரு பகுதியை, மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறது. தொன்மையை துலக்க முயலும் நூல். புதிய கோணத்தில் சிந்திக்க தூண்டும். நன்றி: தினமலர், 24/5/2020 இந்தப் புத்தகத்தை […]

Read more

உள்ளங்கையில் உடல் நலம்

உள்ளங்கையில் உடல் நலம்,  பி.எம்.ஹெக்டே; தமிழில்: நிழல் வண்ணன்,வானவில் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.166.   “நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும் நாம் சிறந்த வாழ்க்கைமுறையைக் கொண்டால் நோயிலிருந்து விரைந்து குணமடைய முடியும்” என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நோய்கள் குறித்தும் மருத்துவம் குறித்தும் நாம் கொண்டுள்ள பல கருத்துகளை இந்நூல் மாற்றியமைத்துவிடுகிறது. நன்றாகத் தூங்கினால், உடல் நலம் பெறும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, “ஒரு நாளைக்கு 9 […]

Read more

ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 200ரூ. பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வார இதழ் ஒன்றுக்கு எழுதிய தொடர்கதையின் தொகுப்பே இந்நூல். விமான கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட ‘திரில்லர்’ கதை. ஒரு விமானி, ராணுவ அதிகாரி, மாவோயிஸ்ட்டுகள், சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இளம் இயக்குனர்கள் என பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் இக்கதையில் பயணிக்கின்றன. அவர்களின் லட்சியம், அடிப்படை சித்தாந்தம், காதல், விரோதம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி சர்வதேச அரசியல் பிரச்சினை வரை நடப்பு நிகழ்வுகளுடன் வலைப்பின்னலாக கதையை நகர்த்தி […]

Read more

ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 264, விலை 200ரூ. ஆகாயத்தில் பூகம்பம் கதையை தொடராக குமுதத்தில் எழுதியபோது ப்ரியா கல்யாண ராமன் எனக்களித்த உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். பார்த்தால் 44 வயது அத்தியாயத்தில் தான் முற்றும் வந்து நிற்கிறது. ஆகவே இது நான் எழுதியதிலேயே மிக நீளமான தொடர்கதையானது என்கிறார் பட்டுக்கோட்டை. ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள். இவர்களது […]

Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குகன், வானவில் புத்தகாலயம், விலை 140ரூ. மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த நேதாஜி, பிறகு “வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் கிடைக்கும்” என்று முடிவுக்கு வருகிறார். “நீ போக்கும் பாதை சரி இல்லை” என்று காந்தி எச்சரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு, பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்துகிறார், காந்தி. யாரும் எதிர்பாராத வகையில் பட்டாபியை எதிர்த்து நேதாஜி போட்டியிடுகிறார். வெற்றியும் பெறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறுகிறார். […]

Read more

இல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள்

இல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள் – கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வானவில் புத்தகாலயம்,  பக்.176, விலை ரூ.133. அண்மைக்காலமாக முகநூல், சுட்டுரைகளில் மிகவும் பரபரப்பாகச் சுட்டப்படும் சொல் இல்லுமினாட்டி. ஒளிபொருந்தியவர்கள், ஞானிகள் என இச்சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டாலும், நவீன யுகத்தில் சர்ச்சைக்குரிய குழுக்கள், உலகத்தின் மூளைகள் என்பார்களாம். காசேதான் கடவுளடா, கடவுள் பாதி மிருகம் மீதி… என விறுவிறுப்பைக் கூட்டும் தலைப்புகளோடு 15 அத்தியாயங்கள். இந்தக் கிரகத்தையே ஆள்வதுதான் இல்லுமினாட்டிகளின் நோக்கம். மிக்கி மெளஸ் நாயகன் வால்ட் டிஸ்னி, இல்லுமினாட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். மூளைச்சலவை […]

Read more

புஷ்பாஞ்சலி

புஷ்பாஞ்சலி, யத்தனபூடி சலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 248, விலை 199ரூ. கதையின் நாயகன் மாதவன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரன். நாடு சுதந்திரம் அடைந்ததும், காங்கிரஸ் தியாகிகள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர். மாதவனும் விடுதலை ஆகிறான். தன் மாமன் மகள், தனக்காகக் காத்திருப்பாள் என்று நம்பிக்கையுடன் வருகிறான். ஆனால், மாமன் மகள் சுதாவுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விடுகிறது. இது அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில், இளம்பெண் ஒருத்தி, அவனை அடித்து, […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, தெலுங்கில் யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 384, விலை 299ரூ. ஏழ்மையில் இருந்த மேனகா, எதிர்பாராத விதமாக நடிகையாகி விடுகிறாள். ஹரி கிருஷ்ணா என்ற  டாக்டரை அவள் நேசிக்கிறாள். மேனகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது, அவளைக் காப்பாற்றியவர் ஹரிகிருஷ்ணா. ஆனால், சந்தர்ப்ப வசத்தால் ஹரி, ரேகா என்ற பெண்ணை மணக்கிறான். ரேகா ஒரு லட்சிய மனைவி அல்ல; ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவள். ஹரியை உதாசீனம் செய்கிறாள். ஹரி ஒரு பரோபகார டாக்டர். தான் […]

Read more
1 2