சா.சோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

சா.சோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், தமிழில் கவுரி கிருபானந்தன், சாகித்திய அகாடமி வெளியீடு, விலை 195ரூ. சா.சோ.எனப்படும் சாகண்டி சோமயாஜுலு என்ற தெலுங்கு எழுத்தாளர், அன்றாட வாழ்க்கையின் பொருளாதார பிரச்சனைகளை நன்றாக உள்வாங்கி அவற்றை சிறுகதைகளாக ஆக்கித் தந்து இருக்கிறார். எதற்கும் சமாதானம் செய்துகொண்டு போனால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதையும், மாற்றத்திற்கு ஏற்ப மனித எண்ணங்களும் சீர்பட வேண்டும் என்பதையும் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் வலியுறுத்துகின்றன. தேர்ந்தெடுத்து தரப்பட்ட 22 கதைகளும் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்றாலும், அனைத்திலும் சமுதாய உணர்ச்சிகள் வெளிப்பட்டு […]

Read more

புஷ்பாஞ்சலி

புஷ்பாஞ்சலி, யத்தனபூடி சலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 248, விலை 199ரூ. கதையின் நாயகன் மாதவன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரன். நாடு சுதந்திரம் அடைந்ததும், காங்கிரஸ் தியாகிகள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர். மாதவனும் விடுதலை ஆகிறான். தன் மாமன் மகள், தனக்காகக் காத்திருப்பாள் என்று நம்பிக்கையுடன் வருகிறான். ஆனால், மாமன் மகள் சுதாவுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விடுகிறது. இது அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில், இளம்பெண் ஒருத்தி, அவனை அடித்து, […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, தெலுங்கில் யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 384, விலை 299ரூ. ஏழ்மையில் இருந்த மேனகா, எதிர்பாராத விதமாக நடிகையாகி விடுகிறாள். ஹரி கிருஷ்ணா என்ற  டாக்டரை அவள் நேசிக்கிறாள். மேனகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது, அவளைக் காப்பாற்றியவர் ஹரிகிருஷ்ணா. ஆனால், சந்தர்ப்ப வசத்தால் ஹரி, ரேகா என்ற பெண்ணை மணக்கிறான். ரேகா ஒரு லட்சிய மனைவி அல்ல; ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவள். ஹரியை உதாசீனம் செய்கிறாள். ஹரி ஒரு பரோபகார டாக்டர். தான் […]

Read more

சீதாவின் பதி

சீதாவின் பதி, யத்தனபூடி, சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 312, விலை 250ரூ. இல்லற வட்டத்திற்க வெளியில், ஒரு பெண் சிநேகிதியை தேடிக்கொள்ளும் கணவன்மார்கள், எத்தனை அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர் என்பதைச் சொல்லும் நாவல் இது. வித்யாபதி, இந்திரா ஆகியோர், ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். சூழ்நிலையால், பெற்றோர் நிச்சயித்த சீதாவை மணம்புரிகிறான் வித்யாபதி. ஆனால், வித்யாபதியால் இந்திராவை மறக்க முடியவில்லை. இந்திராவாலும் வித்யாபதியை மறக்க முடியவில்லை. சீதா, தான் கணவனின் முதல் காதலைப் பற்றி, திருமணம் ஆன அன்றே தெரிந்து […]

Read more