புஷ்பாஞ்சலி

புஷ்பாஞ்சலி, யத்தனபூடி சலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 248, விலை 199ரூ.

கதையின் நாயகன் மாதவன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரன். நாடு சுதந்திரம் அடைந்ததும், காங்கிரஸ் தியாகிகள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர். மாதவனும் விடுதலை ஆகிறான். தன் மாமன் மகள், தனக்காகக் காத்திருப்பாள் என்று நம்பிக்கையுடன் வருகிறான். ஆனால், மாமன் மகள் சுதாவுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விடுகிறது. இது அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில், இளம்பெண் ஒருத்தி, அவனை அடித்து, முகத்திலும் கீறி காயப்படுத்தி விடுகிறாள். அதன்பின், அதே பெண்ணை ஒரு ரயில் கம்பார்ட்மென்டில், மாதவன் தனிமையில் சந்திக்கிறான். ஒரு வேகத்தில் அவளிடம், வழி தவறி நடந்து கொள்கிறான். பிறகு தவறை உணர்ந்து, தற்கொலை செய்துகொள்ளத் துணிகிறான்.

அதன்பின் என்ன நடந்தது என்பது தான் கதை. பிரபல தெலுங்கு எழுத்தாளர் சுலோசனா ராணியின் நாவலை, அழகு தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார் கவுரி கிருபானந்தன்.

-எஸ்.குரு.

நன்றி: தினமலர், 21/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *