தொடுவானம் தேடி

தொடுவானம் தேடி,  அ.தில்லைராஜன், கோ.அருண்குமார், சஜி மேத்யூ,  வானவில் புத்தகாலயம், பக்.264,  விலை ரூ.299. 

தொழில், வணிகம் உலகமயமாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகெங்கும் தமது வேர்களை ஆழமாக ஊன்றி வருகின்றன. இந்நிலையில் அவற்றிற்கிசைவாக, அவற்றின் ஒரு பகுதியாக இங்குள்ள சிறு, குறு தொழில்கள் இருக்க வேண்டிய தேவை உள்ளது.

சிறு, குறு தொழில் நடத்துபவர்கள் நவீன தொழில், வணிக மேலாண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆனால், நமது நாட்டில் சிறு, குறு தொழில், வணிகச் செயல்முறைகள் அனுபவம் சார்ந்தே உள்ளன. அறிவியல்பூர்வமான நடைமுறைகள் மிகவும் குறைவாக உள்ளன. இந்தக் குறைபாட்டைப் போக்கும் விதத்தில் ஐஐடி – மெட்ராஸ் முன் முயற்சியில் நடத்தப்பட்ட வகுப்பறை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

சிறுதொழில்முனைவோர், தொழில் முனைவு குறித்த முறையான அறிவில் பின்தங்கியிருக்கிறார்கள். அவர்கள் முறைசாரா பொருளாதாரப் பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு முறைசார் பொருளாதார நடைமுறைகள் அவசியமாகின்றன.அந்த அவசியத்தை நிறைவு செய்யும் வகையில், நிதியியல், சந்தைப்படுத்துதல், உத்திகளும் செயல்பாடுகளும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், தொழில்முனைவு ஆகிய பிரிவுகளில் அவை தொடர்பான தொழில், வணிக நவீன அறிவு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் படிப்பறிவில்லாத சாதாரண சிறு வணிகரும் புரிந்து கொள்ளும் வகையில் பல எடுத்துக்காட்டுகளுடன் ஒவ்வொரு விஷயமும் எளிமையாக, விரிவாகக் கூறப்பட்டுள்ளது சிறப்பு. பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.

நன்றி: தினமணி, 8/2/2021.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030908_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.