இனப்படுகொலைகள்

இனப்படுகொலைகள்,  குகன்,  விகேன் புக்ஸ், விலை ரூ.140. போர்களின் முடிவுகள், கொள்கை ரீதியிலானவற்றில் எல்லைத் தகராறு, மாறுபாடான புரிதல், தனிமைப்படுத்தும் போக்கு, ஆதிக்க வெறி, சிறுபான்மையினரை ஒடுக்குதல், ஒரு இனத்தை அழிப்பது, மத வெறி முதலான காரணங்கள், கொலை வெறியின் கோரத்தாண்டவமான இனப் படுகொலைகளுக்கு அடிப்படையாக உள்ளன. கொத்து கொத்தாக மடிவது மனித உயிரல்லவா? இந்த இனப் படுகொலை, உலகின் எங்காவது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பேரினப் படுகொலை, தமிழர் இனப் படுகொலை தான். இதை நுாலின் துவக்கமாக […]

Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குகன், வானவில் புத்தகாலயம், விலை 140ரூ. மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த நேதாஜி, பிறகு “வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் கிடைக்கும்” என்று முடிவுக்கு வருகிறார். “நீ போக்கும் பாதை சரி இல்லை” என்று காந்தி எச்சரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு, பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்துகிறார், காந்தி. யாரும் எதிர்பாராத வகையில் பட்டாபியை எதிர்த்து நேதாஜி போட்டியிடுகிறார். வெற்றியும் பெறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறுகிறார். […]

Read more

வல்லமைச் சிறுகதைகள்

வல்லமைச் சிறுகதைகள், பல்வேறு எழுத்தாளர்கள், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 104, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-7.html ஐக்யா டிரஸ்ட் நிறுவனமும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு. பழமை பேசியின் செவ்வந்தி, பார்வதி ராமச்சந்திரனின் நம்மில் ஒருவர், ஜெயஸ்ரீ சங்கரனின் நாலடிக் கோபுரங்கள் ஆகிய கதைகள் நல்ல கதைகள் என்றபோதிலும் வாசகன் பழகிய தடத்திலேயே நடைபோடுகின்றன. சுதாகரின் காட்சிப் பிழை வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்கிறது. […]

Read more