வல்லமைச் சிறுகதைகள்

வல்லமைச் சிறுகதைகள், பல்வேறு எழுத்தாளர்கள், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 104, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-7.html

ஐக்யா டிரஸ்ட் நிறுவனமும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு. பழமை பேசியின் செவ்வந்தி, பார்வதி ராமச்சந்திரனின் நம்மில் ஒருவர், ஜெயஸ்ரீ சங்கரனின் நாலடிக் கோபுரங்கள் ஆகிய கதைகள் நல்ல கதைகள் என்றபோதிலும் வாசகன் பழகிய தடத்திலேயே நடைபோடுகின்றன. சுதாகரின் காட்சிப் பிழை வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்கிறது. சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும் மனித சுபாவம் மாறுவதே இல்லை என்பதைச் சிக்கனமான எழுத்தால் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அரவிந்த் சச்சிதானந்த்தின் கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும் சிறந்த முயற்சியாய் இருந்தபோதிலும் கூர்மை இன்னும் இருந்திருக்கலாம். தேமொழியின் ஜினா என்றொரு க்ருயெல்லா வாசிப்பில் சுறுசுறுப்பு ஏற்படுத்தும் கதை. மாதவன் இளங்கோவின் அம்மாவின் தேன் குழல் தாய் மனத்தின் ஆழ்மன நீரோட்டத்தைக் காட்டும் ஒரு சிறந்த சிறுகதை. அயல்நாட்டின் கலாசார மேலாதிக்க அகங்காரம் மனித வாழ்வின் அவலங்கள், வேதனைகள், இக்கதையில் தத்ரூபமாக சித்திரிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமணி, 3/3/2014.  

—-

முசோலினி, குகன், வானவில் புத்தகாலயம், 10/2, போலீஸ் குடியிருப்பு சாலை, தியாகராயர் நகர், சென்னை 17, விலை 100ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-1.html இத்தாலி நாட்டில் பாசிசத்தின் பெயரால் வெறியாட்டமும், கொடூரமாகவும் நடந்து, இறுதியில் கொடூரமான மரணத்தை அடைந்தவர் முசோலினி. இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். இதனை பயந்துகொண்டும், வியந்து கொண்டும் படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாறு. இதில் ஒரு தலைவர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்ள இவர் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலை படித்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 26/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *