புனிதப் பயணம்

புனிதப் பயணம், துளசி புக்ஸ், 7, கே.எம்.மான்ஷி மார்க், கிர்கான் சவுட்டி, மும்பை 7, விலை 225ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-5.html

அமெரிக்க சுவாமியான ராதாநாத், சுவாமியின் வாழ்க்கை வரலாற்று நூல். ரிச்சர்ட் லோவின் என்ற இளம் சாதகனாக ஆன்மிகத்தைத் தேடி சிகாகோவின் நகர்ப்புற பகுதியிலிருந்து புறப்பட்டு இமயமலைக்குச் சென்று, பின்னர் ஒரு புகழ் பெற்ற ஆன்மிக வழிகாட்டியாக மாறும் வரை தான் பெற்ற அனுபவங்களை இந்நூலில் விவரிக்கிறார் ராதாநாத் சுவாமி. அவர் தான் மேற்கொண்ட சாகசங்களையும், ஆன்மிகத் தேடலையும் பிரேமபக்தியையும் விவரித்துள்ளார். அவர் சந்தித்த மகான்களின் நல் உபதேசங்களின் விளைவால், அவரது சிந்தனைகள் தெளிவடைந்தும் விளக்கப்பட்டுள்ளன. அவர் பெற்ற அனுபவத்தைப் போன்று மற்ற எல்லா மக்களும் பெறுவதற்கு இந்த ஆன்மிக பயணக் கதை துணை புரியும். தி ஜர்னி ஹோம் என்ற ஆங்கில நூலை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள் டி.கே. சம்பத்தும், பெருந்தேவி சம்பத்தும். நன்றி: தினத்தந்தி, 26/2/2014.  

—-

 மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை, குஜராத்தி மூலம் பன்னாலால் படேல், ஆங்கிலத்தில் வி.ஒய்.கண்டக், தமிழில் ந.சுப்ரமணியன், சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 608, விலை 375ரூ.  

To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0001-164-8.html 1947இல் குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட மனவினி பாவாய் என்ற நாவலின் தமிழாக்கம். குஜராத்தின் கிராமப்புற வாழ்வை இயல்பாக சித்திரிக்கிறது 1900ஆம் ஆண்டு குஜராத்தின் கிராமப்புற வாழ்வை இயல்பாக சித்திரிக்கிறது. 1900ஆம் ஆண்டு குஜராத்தின் கிராமப் பகுதிகளில் நிலவிய பஞ்சமே நாவலின் பின்புலம். உணவு கிடைக்காமல் உயிர் வாழ்வதற்காக மக்கள் போராட வேண்டிய அவலநிலை நம் மனதை உருக்குகிறது. பஞ்சம் நிலவிய கிராமப் பகுதிகளிலும் கொள்ளையர்கள் வந்து கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் நிலவுவதும், அப்படியே வந்தாலும் உணவுக்காக வைத்திருக்கும் ஒருவேளைக்கான தானியத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது கொள்ளையடிக்க? என்ற மக்களின் அலட்சியப்போக்கும் மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. வறுமை, பசியும், பட்டினியும் நிலவியபோதிலும் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையில் மலரும் காதலும், அவர்களுக்கு இடையில் எழும் சிக்கல்களும், மனப்போராட்டங்களும், நாவலை முழுமையாக்குகின்றன. நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்திய கிராமம் ஒன்றின் வாழ்வி உணர்ந்து கொள்ள உதவும் நூல். நன்றி: தினமணி, 12/8/2013.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *