சாண்டில்யன் எழுதுகிறேன்

சாண்டில்யன் எழுதுகிறேன், தெ. இலக்குவன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 248, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-2.html

சரித்திர நாவலாசிரியராகப் புகழ் பெற்ற சாண்டில்யனின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதப்பட்டிருக்கும் நூல் இது. சாண்டில்யனின் 35 சரித்திர நாவல்களில் முப்பத்து நான்கும், சரித்திர சிறுகதைத் தொகுப்பு இரண்டும், சமூக நாவல்கள் நான்கும் இதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு குறை, ஆய்வின் பெரும் பகுதி கதையை விவரிப்பதிலேயே போய்விடுகிறது. குறிப்பாக பாண்டியன் பவனி என்ற நாவலைப் பற்றிய அத்தியாயம் முழுவதும் கதையை விவரித்துவிட்டு கடைசியாக ஒரே ஒரு வரியில் வேறு எழுதுவதற்கு எதுவுமில்லாத நாவல் என்ற குறிப்பிடுகிறார் நூலாசிரியர். சாண்டில்யன் தன்னுடைய நாவல்களின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனின்ததனியாக பொருத்தமான தலைப்புகளை வைத்திருப்பதைப் பாராட்டும் நூலாசிரியர், நாவலின் நீளத்துக்காகத் தேவையில்லாமல் பல அத்தியாயங்கள் வருவதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. உதாரணமாக கடல்புறா நாவலில் ஓர் இடத்தில் குணவர்மன் தன் கதையைக் கூறுவதாக ஆரம்பிக்கிறான். ஆனால் நான்கு பக்கங்கள் கழித்துதான் கதை ஆரம்பிக்கிறது. தேவையில்லாமல் பல அத்தியாயங்கள், சலிப்பூட்டக்கூடிய நீண்ட வர்ணனைகள், எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுவது போன்றவற்றால் கதை பல இடங்களில் நீர்த்துப்போய்விடுகிறது என்பதையும் தன்னுடைய ஆய்வுகளின் இறுதியில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். சாண்டில்யனின் அத்தனை படைப்புகளையும் ஒரே சமயத்தில் படித்து முடித்த திருப்தியைத் தரும் நூல் இது. நன்றி: தினமணி, 12/8/2013.  

—-

  புலிகளின் புதல்வர்கள், பா. விஜய், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 275ரூ.

தமிழ்நாடு தற்போது எப்படி இருக்கிறது? என்று அனைவருக்கும் தெரியும். 1800 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நூலாசிரியர் அரிய தகவல்களுடன் நூலாக வடித்துள்ளார். தமிழகத்தை பெருங்காலம் ஆட்சி செய்த சோழ சாம்ராஜ்யத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. மனிதன் வாழும் நிலப்பரப்பையும் தாண்டி கடல் கடந்து அன்னிய தேசத்திற்கு மன்னர்கள் வாணிபமும், படையும் கொண்டு சென்றதை படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான களத்தை பிரம்மாண்டமான வார்த்தைகளால் நூலாசிரியர் எளிமையான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும்வகையில் வெளியிட்டிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பை அளிக்கிறது. கரிகாலனைப் போன்ற தொலைநோக்கு சிந்தனையுடைய மன்னர்கள் மற்றும் இந்திர விழாவை பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வரலாற்று நடப்புகளை தெரிந்து கொள்ள விரும்பும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த நூல் மிகுந்த பயனுள்ள நூலாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *