ராஜீவ் காந்தி கொலை வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு, செ. துரைசாமி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 115ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-6.html
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விரிவாக ஆராயும் நூல். சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞரும், பல முக்கிய வழக்குகளில் ஆஜரானவருமான செ. துரைசாமி இந்நூலை எழுதியுள்ளார். வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டன. அவை நிரூபிக்கப்பட்டனவா, இந்த வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. நடந்து கொண்ட விதம் சரியானதா இதையெல்லாம் நுட்பத்தோடு ஆராய்ந்து எழுதி இருக்கிறார் துரைசாமி. சில மர்ம முடிச்சுகளும் அவிழ்கின்றன. ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை சமீபத்தில் ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட்டு மாற்றியது. இவர்களையும் ஏற்கனவே ஆயுள் தண்டனை அடைந்து 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் மற்றும் 4 பேர்களையும் விடுதலை செய்யப் போவதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் ராஜீவ் காந்தி வழக்கின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 26/2/2014.
—-
தமிழ் தொல்காப்பியம் முதல் இன்று வரை, ச. வே. சுப்பிரமணியன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 192, விலை 90ரூ.
நமது தமிழ்மொழியில் தொல்காப்பியர் காலம் தொடங்கி, இன்று வரை எத்தகைய மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பதை, தமிழ் தொல்காப்பியம் முதல் இன்றுவரை என்ற கட்டுரை விளக்குகிறது. தொல்காப்பியத்தில் அரி (அரியே ஐம்மை 831) என்ற சொல் மென்மையைக் குறிக்கும் சொல்லாக மட்டுமே அன்றைக்கு இருந்ததாம். ஆனால், இன்றைக்கு அச்சொல்லுக்கு 130 பொருள்கள் உள்ளனவாம் இரண்டாவது கட்டுரையில், தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடும், பிந்திய வளர்ச்சியும் என்ற தலைப்பில் தலைப்பு தொடர்பான பல தகவல்களும் நீண்டதொரு இலக்கண நூல் பட்டியலும் (நூல் பெயர், ஆசிரியர், மொத்த நூற்பா, காலம்) இணைக்கப்பட்டுள்ளன. எட்டுத்தொகை, அக இலக்கியங்களில் தொல்காப்பியச் செய்யுளியல் மபுகள், இளம்பூரணர், சேனாவரையர் உரை மரபுகள் என அடுத்தடுத்த இயல்கள் தமிழ் மற்றும் தொல்காப்பியத்தின் பெருமைகளை விரித்துரைக்கின்றன. தொல்காப்பியத்தில் அடிச்சொற்களாக 3128 சொற்கள் உள்ளன. சங்க இலக்கியத்தில் அடிசொற்களாக 10,000 வரை இருக்கலாம். 20ஆம் நூற்றாண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பேரகராதி 1,24,425 சொற்களைப் பதிவு செய்துள்ளது. 2000 ஆண்டுகளில் ஒரு லட்சம் சொற்களுக்கு மேல் தமிழில் வந்துள்ளன. இதற்கு அடிப்படைக் காரணம் பலமொழிச் சொற்களும் தமிழ் மொழியில் கலந்துள்ளமைதான் என்று குறிப்பிடும் நூலாசிரியர், தமிழில் புகுந்த சுமார் 460 உருதுச் சொற்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார். நாம் தமிழ் என நினைத்து அன்றாடம் பேசிப் பயன்படுத்தும் பல சொற்கள் உருது சொற்கன் என்பதை நினைக்கும்போது வியப்பு மேலிடும். தமிழறிஞர் ச.வே.க.வின் கடின உழைப்பில் உருவான சங்கப் புதையல் இது. நன்றி: தினமணி, 12/8/2013.
To buy this Tamil book online: