ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம், நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், புதுடில்லி 110002, பக். 168, விலை 150ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-1.html

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம் மிகவும் இனிமையான பயணம். ஒரு மனிதனின் உண்மையான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம். தனது 8 வயதில் நாளிதழ்கள் பட்டுவாடா செய்யும் பணியில் தொடங்கி 82 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இந்நூலின் மூலம் கலாம் அசை போட்டுள்ளார். தாய், தந்தையர் பாசத்தில் ஆரம்பிக்கும் அவரது பயணம், நட்புகள், உறவுகள், ஆசான்கள், அறிவியல், ஆன்மிகம் மற்றும் சமூகம் என அனைத்துத் தரப்பிலும் தொடர்ந்து பயணிக்கிறது.  விடா முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகியவை இருந்தால் சாமானிய மனிதனும் சாதனையாளராக முடியும் என்பதை மிகத் தெளிவாக விவரிக்கும் அற்புதமான படைப்பு. தனது பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், தனது வாழ்க்கையில் எத்தகைய தாக்குதல்களை ஏற்படுத்தின என்பதை இந்நூலின் மூலம் கலாம் எடுத்துரைத்துள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளும்வகையில் எளிமையான மொழிபெயர்ப்பு. ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் எனது பயணம் கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க நிச்சயம் தூண்டுதலாக இருக்கும். நன்றி: தினமணி, 3/3/2014.  

—-

 முத்துலிங்கம் திரைப்பாடல் முத்துக்கள், வாலி பதிப்பகம், 12/28, சவுந்தரராஜன் தெரு, அறை எண். 25, மாணிக்கம் மேன்சன், தி.நகர், சென்னை 17, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-6.html

பொண்ணுக்குத் தங்க மனசு திரைப்படம் மூலம் 1973ல் அறிமுகமாகி இன்றுவரை புகழ்மிக்க திரைப்படப் பாடல் ஆசிரியராகக் கொண்டாடப்படும் கவிஞர் முத்துலிங்கம் ஆரம்பம் முதல் எழுதிய திரைப்பட பாடல்கள் வருட வாரியாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. திரையில் கேட்டதை விட எழுத்தில் அவரது பாடல்களைப் படிக்கும்போது அவரது இலக்கிய திறனின் முழு வீச்சை உணரமுடிகிறது. கவிஞர் முத்துலிங்கத்தின் கற்பனை பூந்தோட்டமாக விளங்கும் இந்த நூல். சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி இலக்கிய வாசகர்களையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி: தினத்தந்தி, 26/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *