தொட்டிலோசை

தொட்டிலோசை, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், விலைரூ.150. தாய்மையை நெகிழ்ந்து போற்றி எழுதப்பட்டுள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். கவிஞர் வைரமுத்துவின் முன்னுரையுடன் உள்ளது. முதலில், ‘அம்மா இது நீ உறங்க நான் இசைக்கும் தாலாட்டல்ல; உன்னை வணங்க நான் வடிக்கும் பாராட்டு’ என துவங்குகிறது. தொடர்ந்து தாய்மையின் தன்னிகரற்ற பண்புகளை, தியாகத்தை கூர்மையான வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறது. இடையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கவிஞர்கள் வாலி, சிற்பி, மு.மேத்தா என பிரபலங்கள், தங்கள் தாய் குறித்து எழுதியுள்ள கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தாய்மையை எண்ணி […]

Read more

பாணனைத் தொடரும் வெயில்

பாணனைத் தொடரும் வெயில், ச.அருண், வாலி பதிப்பகம், விலை 80ரூ. வறுமை நிழலாய்த் தொடர வாழ்க்கைப் பாதையை அந்த இருளில் தேடும் பாணர்களின் நிலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் கவிதைகள். கண் முன் காட்சியாய் நகர்ந்தாலும் உணரமுடியாத நிஜத்தை கவிதையாய் வாசிக்கிறபோது நெஞ்சம் நெகிழ்வது நிச்சயம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027223.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்,  ஆ.மாதவன், வாலி பதிப்பகம், பக்.160, விலை ரூ.110. மலையாளம், வங்கமொழி, பிரெஞ்ச், ரஷ்யன், இத்தாலி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட 17 சிறுகதைகளைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன். தகழி, மாதவிக்குட்டி, பொன்குன்னம் இல்லியாஸ், கெ.யூ.அப்துல்காதர், மாப்பசான், பால்ஸாக், மாக்சிம் கார்க்கி, பொக்காஷியோ, பிரபாத் குமார் முகர்ஜி ஆகிய புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1956 முதல் 1973 வரை திராவிடன், பகுத்தறிவு, போர்வாள், கண்ணதாசன் ஆகிய சிற்றிதழ்களில் இக்கதைகள் வெளியிடப்பட்டுள்ளன. தொகுப்பில் இடம் […]

Read more

நான் ரசித்த வாலி

நான் ரசித்த வாலி, திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், வாலி பதிப்பகம், விலை 90ரூ ரசிகனின் பார்வை புலமை எதுவும் பெற்றிராத ஒரு இரசிகனின் பார்வையில் வாலியின் பாடல்களில் மிளிரும் எண்ணங்களின் பதிவே இது – என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். தமிழ் திரைப்பட உலகை விரல் நுனியிலும் தன் ஆவணக்காப்பகத்திலும் வைத்திருக்கும் சந்தானகிருஷ்ணன் வாலியின் பாடல்களைப் பற்றிய தன் எண்ணங்களை நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளார். ‘பூவரையும் பூங்கொடியே, பூமாலை போடவா’ என்ற பாடலில் ஆரம்பிக்கும் நூலாசிரியர் இப்பாடலின் சூழலை விவரித்து, பாடலின் நயங்களை எழுதுகிறார். அத்தோடு […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-867-0.html மறைந்த கவிஞர் வாலி எழுதிய ஐந்து சிறுகதைகளும் ஒரு நெடுங்கதையும் அடங்கிய தொகுப்பு. சங்கீத குருவின் மகளை சிஷ்யன் மணக்கும் கலப்பின காதல் கதையை அது அதில் இல்லை நெடுங்கதையில் ரசமாகவும் சங்கீதமாகவும் தந்திருக்கிறார் கவிஞர். என் அப்பாவுக்கு நீதான் பிள்ளை. அவரை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அற்ப ஆயுசில் கணவன் இறக்க, மாமனாரை […]

Read more

வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html தலைமுறைகளைக் கடந்தும் ஜெயித்த திரையுலக ஜாம்பவான் வாலி பற்றிய 100 சுவையான செய்திகளின் தொகுப்பு. இவை செய்திகளல்ல. ஒவ்வொன்றும் ஒரு பதிவு. அடுத்த தலைமுறையினருக்கு வாலி பற்றிய ஒரு பாடம். வாலியின் துணிவு, நன்றி உணர்வு, நட்பு, நகைச்சுவை, எளிமை, ஈகோ இல்லாத மனம், யாருக்கும் தலைவணங்கா மாண்பு, தீராத தேடல், அவரது பட்டறிவு என்ற வாலியைச் சுற்றி […]

Read more

வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், பக். 102, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html வாலியின் அறியப்படாத முகம் திரைப்பட பாடல்களை, வெறும் பாடல் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தமிழ் திரைப்பாடலின் மொழி, ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறியும் அரிய பொக்கிஷமாகவே பார்க்க வேண்டும். தமிழ் திரைப்பாடல் வரலாற்றில், கவிஞர் வாலிக்கென தனித்த இடம் உண்டு. மூன்று தலைமுறை கதாநாயகர்களுக்கும் திரைப்பாடல் எழுதியதால், அவரின் தமிழ் தலைமுறை கடந்தும் பாராட்டப்படுகிறது. […]

Read more

அம்மா

அம்மா, வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 60ரூ. சினிமாவைத் தாண்டி வாலிக்கிருந்த இலக்கியச் சிந்தனையை சுவைக்க விரும்புவோர் இந்தத் தொகுதியைப் படித்தாலே போதும். தாயை, தந்தையை, காஞ்சிப் பெரியவர், குலகுரு என்று பாடிய அவரேதான் முடிதிருத்தும் முனியனையும் பாடுகிறார். சலவைத் தொழிலாளியை, விறகு வெட்டியை, பெண்ணின் எழிலை, மின்னலை இப்படி அவர் தொடாத பொருளில்லை. அவர் பாடலில் இடம்பெற்றால் அந்தப் பொருளுக்கும் புது அர்த்தம் வந்துவிடுகிறது. தாய் பற்றிய கவிதையில் அம்மாவின் ஆன்மாவையே தரிசிக்க வைத்துவிடுகிறார். நன்றி: குமுதம், 6/8/2014. […]

Read more

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும்

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும், வாலி எழுதிய எம்.ஜி.ஆர். படப்பாடல்கள், வாலி பதிப்பகம், சென்னை. தமிழ்த் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து தன் மறைவுக்குப் பின்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். அவரது திரைப்புகழ் அரசியல் வெற்றியாக மாற்றம் அடைந்ததற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவரது படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள். எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் பாத்திரங்களை அல்லாமல் எம்.ஜி.ஆர். எனப்படும் மாமனிதரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல்கள் அவை. எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் என்ற பாடல் அவரது […]

Read more

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள், ம. லெனின், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 296, விலை 185ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-211-7.html மனிதமூளை ஓர் அற்புதமான இயந்திரம். அதை முறைப்படி கையாண்டால் யாராக இருந்தாலும் சாதனையின் சிகரத்தை அடைய முடியும் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். மூளையை முறைப்படி கையாளுவதற்கு புத்தகத்தில் கூறப்பட்டுள்ள 300 பயிற்சிகளும் சிறப்புக்குரியவை. அவற்றுடன் தொடர்புபடுத்தி கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளும், படங்களும் புத்தகத்தைப் படிப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் வித்தியாசமாகச் […]

Read more
1 2