ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்,  ஆ.மாதவன், வாலி பதிப்பகம், பக்.160, விலை ரூ.110. மலையாளம், வங்கமொழி, பிரெஞ்ச், ரஷ்யன், இத்தாலி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட 17 சிறுகதைகளைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன். தகழி, மாதவிக்குட்டி, பொன்குன்னம் இல்லியாஸ், கெ.யூ.அப்துல்காதர், மாப்பசான், பால்ஸாக், மாக்சிம் கார்க்கி, பொக்காஷியோ, பிரபாத் குமார் முகர்ஜி ஆகிய புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1956 முதல் 1973 வரை திராவிடன், பகுத்தறிவு, போர்வாள், கண்ணதாசன் ஆகிய சிற்றிதழ்களில் இக்கதைகள் வெளியிடப்பட்டுள்ளன. தொகுப்பில் இடம் […]

Read more

இலக்கியச் சுவடுகள்

இலக்கியச் சுவடுகள், ஆ. மாதவன், ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 250ரூ. பல்வேறு காலகட்டங்களில் ஆ. மாதவன் எழுதிய பல நிகழ்வுகளில் வாசித்த 40 இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலின் தடத்தைக் காட்டுகிறது. எண்பதுகளின் தமிழ் நாவல்கள் நான்கு கட்டுரை மிக நேர்த்தி. ஆண்டுதோறும் இத்தகைய மதிப்பீடுகளை அவர் செய்திருக்கலாகாதா? என கேட்கத் தோன்றுகிறது. பஷீரின் படைப்புலகம் கட்டுரை மிக நீண்டது (30 பக்கங்கள்) என்றாலும், ஒரு தமிழ் வாசகனுக்கு வைக்கம் முகமது பஷீரின் படைப்பாற்றலை […]

Read more

பெயரில்லாத கதை

பெயரில்லாத கதை, ஆ. மாதவன், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 256, விலை 160ரூ. முப்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கண்டெடுத்த கதை என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அழுகை சிறுகதை. கூர்மையான உத்தியுடன் கூடிய படைப்பு.  இக்கதையின் நாயகி அடிக்கடி அழுது உணர்ச்சி வசப்படுகிறாள். ஒரு மயக்கமான சூழலில் அவள் தன் வசமிழக்கிறாள். தன் பலவீனம் பயன்படுத்தப்பட்டதை அவள் உணர்ந்தாளா என்பது வாசகர்களின் யூகத்துக்கு விடப்பட்டுள்ளது. வாழ்வு சார்ந்த இருண்மை ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள படைப்பு. உரையாடல் […]

Read more

கடைத்தெருக் கதைகள்

கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆ. மாதவன் தமிழ்ச் சிறுகதை உலகில் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர். இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு, அன்றைய சிற்றிதழ்களில் வெளியானவை. மறுபதிப்பு காண்பதும் இவை வெளியான சிற்றிதழ்களும் இத்தொகுப்பின் சிறப்புக்கு சாட்சியங்கள். திருவனந்தபுரத்தில் அங்காடி வீதியில் கடை வைத்திருந்தவர் பார்க்க நேர்ந்த மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையில் நேர்ந்த, நேர்ந்திருக்கக்கூடிய, நேர்ந்திருக்க வேண்டிய சம்பவங்களின் நீட்சிதான் இந்தச் சிறுகதைகள். கடைத்தெருவில் சிற்றேவல் செய்தும், […]

Read more