தொட்டிலோசை
தொட்டிலோசை, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், விலைரூ.150.
தாய்மையை நெகிழ்ந்து போற்றி எழுதப்பட்டுள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். கவிஞர் வைரமுத்துவின் முன்னுரையுடன் உள்ளது. முதலில், ‘அம்மா இது நீ உறங்க நான் இசைக்கும் தாலாட்டல்ல; உன்னை வணங்க நான் வடிக்கும் பாராட்டு’ என துவங்குகிறது. தொடர்ந்து தாய்மையின் தன்னிகரற்ற பண்புகளை, தியாகத்தை கூர்மையான வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறது.
இடையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கவிஞர்கள் வாலி, சிற்பி, மு.மேத்தா என பிரபலங்கள், தங்கள் தாய் குறித்து எழுதியுள்ள கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தாய்மையை எண்ணி உருகும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
– ஒளி
நன்றி: தினமலர், 16/1/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9a%e0%af%88/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818