கீரைகள்
கீரைகள், மு.ந. புகழேந்தி, கோரல் பதிப்பகம், விலைரூ.70.
கீரைத் தோட்டம் ஒரு மருந்து பெட்டி என, பிரபல எழுத்தாளர் டால்ஸ்டாய் கூற்றுக்கு ஏற்ப, கீரைகள் பற்றி விளக்கம் தரும் நுால்.
கீரை உணவின் சிறப்பு பற்றி முதல் கட்டுரை உணர்த்துகிறது. தொடர்ந்து அகத்தி கீரையில் துவங்கி, ஆரை, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை, வள்ளக்கீரை வரை பல வகை கீரைகளின் அடிப்படை தகவல்கள், சத்துகள், உண்ணும் முறை என விரிவாக தரப்பட்டுள்ளது.
நலம் மிக்க வாழ்வுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கீரை உணவு பற்றி அடிப்படை அறிவை வளர்க்கும் வகையில் உள்ளது.
– மலர்
நன்றி: தினமலர், 16/1/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818