அம்மா

அம்மா, வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 60ரூ. சினிமாவைத் தாண்டி வாலிக்கிருந்த இலக்கியச் சிந்தனையை சுவைக்க விரும்புவோர் இந்தத் தொகுதியைப் படித்தாலே போதும். தாயை, தந்தையை, காஞ்சிப் பெரியவர், குலகுரு என்று பாடிய அவரேதான் முடிதிருத்தும் முனியனையும் பாடுகிறார். சலவைத் தொழிலாளியை, விறகு வெட்டியை, பெண்ணின் எழிலை, மின்னலை இப்படி அவர் தொடாத பொருளில்லை. அவர் பாடலில் இடம்பெற்றால் அந்தப் பொருளுக்கும் புது அர்த்தம் வந்துவிடுகிறது. தாய் பற்றிய கவிதையில் அம்மாவின் ஆன்மாவையே தரிசிக்க வைத்துவிடுகிறார். நன்றி: குமுதம், 6/8/2014. […]

Read more

அம்மா

அம்மா, சுப்ரஜா, வாதினி, சென்னை, பக். 128, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-9.html ஜனரஞ்சகமான கதைகள் எழுதிவரும் சுப்ரஜா, ஒரு சுவாரஸ்யமான கதாசிரியர். வார்த்தைச் சிக்கனம், அந்தச் சிக்கனமான வார்த்தைகளுக்கும் ஒரு வசீகரம், கவர்ச்சி, மிக ஆழமான கதைக் கருவை லகுவாகக் கையாளும் எழுத்துத் திறன், ஐம்பது காசு என்ற கதையும், ஸ்டார்ட் ஆக்ஷன் கதையும் இவரது கதை எழுதும் நேரத்திற்கு கட்டியம் கூறுபவை. அமரர் சுஜாதாவின் சிஷ்யர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன இவரது எழுத்து நடை. […]

Read more

திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் ஆர். நாராயணன், பூங்கொடி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-432-4.html திருக்குறளைப் பலர் பல கோணங்களில் அலசி ஆராய்ந்திருக்கின்றனர். இந்நூலாசிரியர், திருக்குறளின் அதிகாரங்களிலிருந்து உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றின் சிறப்பான இயல்புகளை திருக்குறளில் இயற்கை, திருக்குறளில் தாவரம், திருக்குறளில் விலங்குகள் என்னும் தலைப்புகளில் விளக்கியிருப்பது மிகவும் புதுமையானது. இந்நூலைப் படித்துவிட்டு, மீண்டும் திருக்குறளைப் படிக்கும் தமிழன்பர்கள் திருக்குறளில் புதியதொரு இலக்கிய இன்பத்தை அனுபவிப்பர் என்பது நிச்சயம். -மயிலை சிவா. நன்றி: தினமலர், […]

Read more