திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் ஆர். நாராயணன், பூங்கொடி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-432-4.html திருக்குறளைப் பலர் பல கோணங்களில் அலசி ஆராய்ந்திருக்கின்றனர். இந்நூலாசிரியர், திருக்குறளின் அதிகாரங்களிலிருந்து உயிரினங்களை வகைப்படுத்தி, அவற்றின் சிறப்பான இயல்புகளை திருக்குறளில் இயற்கை, திருக்குறளில் தாவரம், திருக்குறளில் விலங்குகள் என்னும் தலைப்புகளில் விளக்கியிருப்பது மிகவும் புதுமையானது. இந்நூலைப் படித்துவிட்டு, மீண்டும் திருக்குறளைப் படிக்கும் தமிழன்பர்கள் திருக்குறளில் புதியதொரு இலக்கிய இன்பத்தை அனுபவிப்பர் என்பது நிச்சயம். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 16/3/2014.  

—-

அம்மா, வாதினி, 19-29, ராணி அண்ணாநகர், கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-215-9.html

பிரபல இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு நூல். கதைகளில் வரும் நிகழ்வுகள் பலரின் வாழவில் அன்றாடம் சந்திக்கும், நடந்து கெண்டிருக்கும் நிகழ்வுகள்தான் என்றாலும், படித்தபின் மனதில் அசைபோட வைக்கும் சிறுகதைகளாக ஆக்கியுள்ளார் நூலாசிரியர் சுப்ரஜா. நன்றி: தினத்தந்தி, 12/3/2014.  

—-

நாடகக் களஞ்சியம், ப. வேட்டவராயன், சாகுந்தலை பதிப்பகம், 15, அம்மச்சார் கோவில் தெரு, காவேரிப்பாக்கம், திண்டிவனம் 604001, விலை 185ரூ.  

விநாயகர் விஜயம், கடமைக்கொரு கபிலர், ஸ்ரீ ராமானுஜர் ஆகிய 3 நாடகங்களை உள்ளடக்கிய நாடக நூல் இது. பக்தி, வரலாறு, சமுதாய சீர்திருத்தம் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த நாடகங்கள், படிக்கும்போதே காட்சிகள் மனதில் பதியும் வண்ணம் எளிய நடையில் அமைக்கப்பட்டு உள்ளன. நாடகங்களில் நகைச்சுவை உள்ளிட்ட அத்தனை அம்சங்களும் அடங்கியிருப்பதுடன், இயல், இசை, நாடகம் என முத்தமிழும் இழையோடியிருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 12/3/2014.

Leave a Reply

Your email address will not be published.