ஆன்மிகம் அறிவோம் சைவ சமய வினாவிடை
ஆன்மிகம் அறிவோம் சைவ சமய வினாவிடை, பூங்குன்றம் நா.க.ராமசாமி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 128, விலை 50ரூ.
நூலாசிரியர் சைவத் திரு நா.க.ராமசாமி, சைவ சமய சாத்திரங்களில் ஆழப்புழமை நிறைந்த பெருமகனார். மூத்த சைவ ஆதினமான திருவாவடுதுறை திருமகா சன்னிதானத்தின் அருளாசியை முழுமையாக கைவரப் பெற்ற அறிஞர். ஆன்மிகம் அறிவோம் என்ற இவரது நூலில் சைவ சமய உட்கருத்துக்களை கேள்வி பதில் வாயிலாக மிக அருமையாக எளிய தமிழில், நூலாகத் தந்துள்ளார். முகப்பு என்ற தலைப்பிட்டுத் துவங்கி முடிவு என்ற தலைப்போடு, 250 கேள்வி பதிலோடு நூல் நிறைவடைகிறது. வழிபடும் முறை (பக். 24), சிவ வழிபாடு (பக். 31), ஆணவம், வினை, மாயை (பக். 60-61), முக்தி (பக். 91) போன்ற சைவ, சமயத்திற்கு முத்தாய்ப்பான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மிகச் சுருக்கமாக ஓர் ஆசிரியர், மாணவனுக்குப் போதிப்பது போன்று விளக்கியுள்ள முறை நூலாசிரியரது சைவ சமய அடிப்படைக் கொள்கைகளை மிக எளிமையாகத் தந்துள்ள இந்நூல் அனைத்து சைவப் பெருமக்களுக்கும் ஒரு கையேடு. -குமரய்யா. நன்றி: தினமலர், 16/3/2014.
—-
தமிழ்மொழி சமுதாயம் பண்பாடு, முனைவர் இரா. பாலகிருஷ்ணன், சபாநாயகம் பதிப்பகம், 176, கீழரதவீதி, சிதம்பரம் 1, விலை 250ரூ.
சமுதாயமும் பண்பாடும், சமுதாயமும் மொழியும், தமிழ்ச் சமுதாயத்தில் கூற்றாடல் நெறி. தொல் தமிழரின் மனித இனம் சார் மொழியியல் கொள்கை, தொல்காப்பியம், பொருளதிகாரமும், தமிழ்ச் சமுதாயமும், மொழியும் பண்பாடும், தற்காலத் தமிழும் பண்பாடும் ஆகிய தலைப்பின்கீழ் ஆய்வு நோக்கில் படைக்கப்பட்ட இந்நூல் அழகாகவும், அகலமாகவும் விளக்கப்பட்டுள்ளது. சமுதாய வரலாறு, கற்க விரும்புவோருக்கு பயன்படும் நூல். நன்றி: தினத்தந்தி, 12/3/2014.