ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்
ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர், எஸ். ராஜகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக். 176, விலை 85ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-862-4.html
மறைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூரார் பி. ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகாக, எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். இரண்டாடுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், இன்றளவும் ஓமந்தூராரின் நிர்வாகத்திறமை போற்றப்படுகிறது. அதனை பல சான்றுகளோடு விளக்குகிறார். நிர்வாக பயிற்சி ஏதும் இல்லாது, ஆட்சியில் அமர்ந்து அரிய சாதனை படைத்த ஓமந்தூராரை, நேரு பாராட்டியவிதம் போன்றவை அரிய தகவல்கள். ஒரு உன்னதமான, அப்பழுக்கற்ற, அரசியல்வாதியின் வாழ்க்கையை படிக்கும்போது, இன்றைய அரசியல்வாதிகள் மனதில் வந்துபோகின்றனர். இளைய தலைமுறை படித்தறிய வேண்டிய புத்தகம். -ஜி.வி.ஆர். நன்றி: தினமலர், 16/3/2014.
—-
தொல்தமிழியச் சிந்து நாகரிகம், தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலத் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 125ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-5.html
சிந்து நாகரிகத்தைப் பற்றிய முழுமையான செய்திகள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கும் நூல். மாந்த இனத் தோற்றமும் பரவலும், மொழியின் தோற்றமும் பரவலும் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. சிந்து நாகரிகம் சார்ந்த பல்வேறு கூறுகளான வாழ்வியல் எடை, அளவு, கலை, பண்பாடு, சமயம் பற்றிய செய்திகள் மற்றும் வரலாற்று மொழியியல்-தொல்லியல் செய்திகள் ஆய்வு நோக்கில் விளக்கப்பட்டுள்ளன. சிந்து அகழ்வு ஆராய்ச்சியில் கிட்டிய சான்றுகள், ஆரியமல்ல தமிழியம் சார்ந்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நூலைப் படிப்பவர் பயன் கருதி ஆங்காங்கு தலைசிறந்த ஆய்வறிஞர்களின் முக்கியமான ஆதாரக் கருத்துக்களின் ஆங்கில மூலங்களையும் தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர் பி. ராமநாதன். நன்றி: தினத்தந்தி, 12/3/2014. ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்