எனது வாழ்க்கைப் பயணம்

எனது வாழ்க்கைப் பயணம், மருத்துவர் சு. முத்துசாமி, தாய்த்தமிழ்ப்பள்ளி வெளியீடு, பக். 360, நன்கொடை 200ரூ. ஒரு குக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து, படித்து இன்று சிறந்த மருத்துவராக விளங்கும் ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்க்கைப் பயணத்தை கதைபோல் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.   —- அருட்பெருஞ்சோதி நாட்டிய நாடகம், அருள்பாரதி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 80, விலை 55 ரூ. வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை, சிறுவர்கள் படித்து நாடகமாக நடிப்பதற்கு ஏற்ற […]

Read more

குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு

குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு, முனைவர் நித்யா அறவேந்தன், காவ்யா, பக். 176, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-7.html சங்க இலக்கியங்கள் இணையற்ற ஏற்றம் உடையவை. அவற்றுள் கபிலர் வழங்கியுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் ஊட்டியது. தமிழ் தாத்தா உ.வே.சா., 1889ல் இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட இப்போது, 2011 வரை 35 பதிப்புகள் வெளிவந்துள்ளன. நூலாசிரியர் பதிப்பு வரலாற்றுடன் உரைகளின் போக்கு, உரை வேறுபாடுகள், உவமைகள், உலகாயுதச் சிந்தனைகள், குறிஞ்சிப் பாட்டின் மலர்கள், ஒப்பீடு, […]

Read more

ஆன்மிகம் அறிவோம் சைவ சமய வினாவிடை

ஆன்மிகம் அறிவோம் சைவ சமய வினாவிடை, பூங்குன்றம் நா.க.ராமசாமி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 128, விலை 50ரூ. நூலாசிரியர் சைவத் திரு நா.க.ராமசாமி, சைவ சமய சாத்திரங்களில் ஆழப்புழமை நிறைந்த பெருமகனார். மூத்த சைவ ஆதினமான திருவாவடுதுறை திருமகா சன்னிதானத்தின் அருளாசியை முழுமையாக கைவரப் பெற்ற அறிஞர். ஆன்மிகம் அறிவோம் என்ற இவரது நூலில் சைவ சமய உட்கருத்துக்களை கேள்வி பதில் வாயிலாக மிக அருமையாக எளிய தமிழில், நூலாகத் தந்துள்ளார். முகப்பு என்ற தலைப்பிட்டுத் துவங்கி முடிவு என்ற தலைப்போடு, 250 […]

Read more