குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு

குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு, முனைவர் நித்யா அறவேந்தன், காவ்யா, பக். 176, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-7.html

சங்க இலக்கியங்கள் இணையற்ற ஏற்றம் உடையவை. அவற்றுள் கபிலர் வழங்கியுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் ஊட்டியது. தமிழ் தாத்தா உ.வே.சா., 1889ல் இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட இப்போது, 2011 வரை 35 பதிப்புகள் வெளிவந்துள்ளன. நூலாசிரியர் பதிப்பு வரலாற்றுடன் உரைகளின் போக்கு, உரை வேறுபாடுகள், உவமைகள், உலகாயுதச் சிந்தனைகள், குறிஞ்சிப் பாட்டின் மலர்கள், ஒப்பீடு, சொல், பொருள், அடைவு என விரிவாக ஆராய்ந்துள்ளார். பதிப்பு வரலாறு அட்டவணை நூலில் தரப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் தோய்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டுமல்லாது, தமிழ் படிப்பறிவு உடைய எவரும் புரிந்து கொண்டு மகிழத்தக்க வகையில் நூல் எழுதப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 16/3/2014.  

—-

 

ஆன்மிகம் அறிவோம் சைவ சமய வினாவிடை, பூங்குன்றம் நா.க.ராமசாமி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 128, விலை 50ரூ.

ஆன்மிகம் சார்ந்த ஏன் என்ற பல வினாக்களுக்கு விடையாக விரிந்துள்ளது இந்நூல். சிவம் என்றால் என்ன? சிவனை ஏன் வழிபட வேண்டும்? கோவில் வழிபாட்டின் நோக்கம் என்ன? என்பது போன்ற பல்வேறு வினாக்களுக்கு தெளிவாக, எளிமையான விளக்கங்களை அளிக்கிறது இப்புத்தகம். நன்றி: தினத்தந்தி, 12/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *