தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 182, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-212-1.html

மயில், குயில், குருவி, கிளி, புறா, காகம், ஆந்தை, மரங்கொத்தி, உள்ளான், முக்குளிப்பான் என தமிழகத்தில் அதிகம் காணப்படுகிற 328 பறவைகளைப் பற்றிய நூல். அவற்றின் உடல் அமைப்பு, நிறம், குரல், குணம், உணவு, வாழுமிடம், இனப்பெருக்க காலம், கூடுகள், முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான விவரங்கள் கொட்டிக் கிடக்கிற அரிய நூல். குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் உட்பட பலருக்கும் பறவை இனங்களை விரைவாக அடையாளம் காண உதவும் வகையில் நுலாசிரியர் விளக்கியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது. பறவைகளின் தமிழ்ப்பெயர், ஆங்கிலப்பெயர், அறிவியல் பெயர், குடும்பப் பெயர் ஆகியனவற்றோடு பறவைகளின் உடல் அமைப்பையும், நிறத்தையும் வண்ண ஓவியங்களாகவே வடித்திருப்பது நூலுக்கு மேலும் மெருகு கூட்டியிருக்கிறது. ஒருசில பறவைகளின் வண்ணப் புகைப்படங்களும் நூலில் ஆங்காங்கே இடம் பிடித்திருக்கின்றன. நூலாசிரியரின் அளவு கடந்த ஆர்வத்தாலும் வித்தியாசமான முயற்சியாலும் விளைந்த இந்த நூலுக்கு தமிழக அரசு முதல் பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறது. தெரிந்த பறவைகளாக இருந்தாலும், அவற்றைப் பற்றித் தெரியாத பல செய்திகளைச் சொல்லி இருக்கிற சிறந்த நூல். நன்றி: தினமணி, 24/2/2014.  

—-

தமிழ்வாணன் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 320ரூ.   to buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-212-0.html

தமிழ் நாவல் உலகில் திருப்புமுனை ஏற்படுத்திய முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் தமிழ்வாணன். ஒரு தபால் கார்டில், விலாசம் எழுதும் இடத்தில் ஒரு தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் வரைந்தால் போதும். தமிழ்வாணனுக்குப் போய்ச் சேர்த்துவிடும். அவ்வளவு புகழ். குழந்தைகளுக்காக எழுத ஆரம்பித்த அவர், பின்னர் பெரியவர்களுக்காக எழுதினார். பெரும்பாலும் துப்பறியும் கதைகள், அவடைய துப்பறியும் மர்ம நாவல்கள் கொண்ட 2ம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. பிடி22 டோக்கியோவில் தமிழ்வாணன், கெய்ரோவில் தமிழ்வாணன் பிராங்க்பர்ட்டில் தமிழ்வாணன் ஆகிய 4 நாவல்கள் இதில் உள்ளன. தமிழ்வாணன் கதைகள் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் ஏது? புத்தகத்தை கையில் எடுத்தால் முடிக்கும்வரை வேறு வேலையில் கவனம் செல்லாது. நன்றி: தினத்தந்தி, 12/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *