எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி,
எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி, மணிவாசகர் பதிப்பகம், விலை 90ரூ. கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் பாடல்கள் எழுத, எம்.ஜி.ஆர். நடித்த காலக்கட்டம், தமிழ்த்திரை உலகில் ஒரு பொற்காலம் என்று கூறலாம். சிறந்த பாடல்கள் வரிசையாக வந்தன. அருமையான பாடல்கள் அணிவகுத்தன. கவிஞர் பொன்.செல்லமுத்து எழுதிய இந்தப் புத்தகத்தில், எம்.ஜி.ஆர். படங்களில் கண்ணதாசனும், வாலியும் எழுதிய பாடல்கள் விவரம் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆருக்கு பாட்டு எழுதிய மற்ற கவிஞர்களின் விவரமும் உள்ளது. மொத்தத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவரும் விரும்பி ரசிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 3/5/2017.
Read more