வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், வாலி, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தரராஜன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html

சிறுகதையோ, நெடுங்கதையோ இருந்தால் சவுக்காயிருக்க வேண்டும் அல்லது சவுக்காரமாய் இருத்தல் வேண்டும். இதுதான் சிறுகதைகளுக்கு வாலி சொல்லும் இலக்கணம். இத்தொகுப்பு முழுதும் அந்த நெடிதான் தூக்கல். சங்கீதத்திற்கு ஜாதி மதம் கிடையாது என்பதை ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குருவை வைத்து, கோவிந்த நம்பூதிரியின் ஜாதி வெறியை சவுக்கால் அடித்திருக்கும் அது அதில் இல்லை என்ற நெடுங்கதை வாலியின் உள்மனத்தராசைக் காட்டுகிறது. காசுன்னா பணம்னு மட்டும் அர்த்தமில்லே. குற்றம்னு அர்த்தம். அதனால காதல் காசில்லாதவன் மேலேதான் வரும் என்று நப்பின்னையைக் கொண்டு கன்னத்தில் அறைந்து சொல்வது புதிய சவுக்கடி. இன்னும் அனுமார் கோயில் மணியோசை, பாவாடை, பிராந்தி, நாய்வால் ஆகிய சிறு கதைகள் வாலியின் சவுக்கடி எழுத்துக்கு சாட்சிகள். சினிமாவில் கவிதையில் ஜெயித்த வாலி, சிறுகதைகளிலும் ஜெயித்த கதைதான் இந்தத் தொகுப்பு.  

—-

 

தமிழரின் சமையலறை மருந்துகள், டாக்டர் ஜி. லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், 13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 176, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-6.html

பூண்டை உரித்து இரண்டு பற்களை 2 அல்லது 3 முளை நீருடன் சாப்பிட்டு வந்தாலே போதும் இரத்த அழுத்தம் குறைந்துவிடும். வாழைத் தண்டு சாறு பிழிந்து காலை, மாலை ஒரு தம்பளர் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகாது. இதுபோன்ற சமையல் அறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தலைவலி முதல் கால், மூட்டுவலி வரை மனித உடலின் அத்தனை நோயையும் போக்கலாம் என்பதை உணர்த்தும் நூல். மனநோய்க்குக் கூட சமையலறை மருந்துகளை இவர் பரிந்துரைக்கிறார். மன அழுத்தம் நீங்க ஆப்பிள் நல்லது என்கிறார். செலவில்லாமல் நோயைக் குறைக்க உதவும் நூல் -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 9/10/2013.  

—-

 

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127(63), பிரகாசம் சாலை, (பிராட்வே), சென்னை 108, விலை 320ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-0.html

கர்ணனைப் பற்றிய திறனாய்வு நூல். கர்ணன் ஒரு தான, தர்ம வீரன். யாராலும் வெல்ல முடியாத வில் வீரன். கொடை வள்ளல் என்று மொத்த உலகமுமே இப்படித்தான் அவனை சொல்கிறது. ஆனால் கர்ணன் எதை தானம் செய்தான்? எப்போது தானம் செய்தான்? யார் யாருக்கு தானம் செய்தான்? இக்கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. மேலும் கர்ணன் வாழ்ந்த காலம் முழுவதுமே நான் யார்? என் குலம் என்ன? என்ற கேள்விகளோடேயே அலைந்தான். மன நிம்மதியையும் இழந்தான். ஒரு நாள் தான் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டான். எப்படி? அர்ச்சுனன் தர்ம யுத்தம்தான் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி பாரதப் போரில் கர்ணனை கொலை செய்தானா? இதுபோன்ற கருத்துக்களை கேள்விக்குறிகளாக்கி இத்திறனாய்வு நூலை வித்தியாசமான கண்ணோட்டத்தில் புதுமையான கருத்துக்களுடன் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் எஸ். விஜயராஜ். நன்றி: தினத்தந்தி, 2/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *