மௌனத்தின் நிழல்

மௌனத்தின் நிழல், கர்ணன், கவிதா பப்ளிகேஷன், பக்.320, விலை ரூ.280. விடுதலைப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் ஏற்கெனவே பல புதினங்கள் வந்துள்ளன. இதுவும் அவ்வகையிலானதுதான் எனினும், குறிப்பிட்ட ஓர் ஊரை மட்டுமே கதைக்களமாகக் கொண்டிருப்பதாலும், நிஜத்தில் வாழ்ந்து மறைந்தவர்களே கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பதாலும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. ஆன்மிக நகரமாக அறியப்பட்டிருக்கும் மதுரை, தென்னிந்தியாவின் அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்ததை ஏராளமான உண்மை நிகழ்வுகள் மூலம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். தொடக்கத்தில் காவல்துறை அதிகாரி சேதுராமன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வதைப் படிக்கும்போதே […]

Read more

கர்ணன்

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 376, விலை 320ரூ. பாரதப் போரில் அர்ச்சுனன் தர்ம யுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி கர்ணனைக் கொலை செய்தானா? குந்திதேவி கர்ணனைத் தன் மகன் என்று அறிமுகப்படுத்தாதன் நோக்கம் என்ன? தர்மன் உண்மையில் சமாதானத்திற்கான வழியை நாடினானா அல்லது நாடு முழுவதையும் அபகரிக்கும் எண்ணத்தில் இருந்தானா? கர்ணன் துரியோதனனுக்கு நண்பனாக செயல்பட்டானா? துரோகம் செய்தானா? துரியோதனன் நட்புக்காக கர்ணனை ஆதரித்தானா? அல்லது தன் பாதுகாப்புக்காகவா? போன்ற […]

Read more

கர்ணன்

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 380, விலை ரூ.320. எஸ். விஜயராஜ் ஓர் திரைப்பட இயக்குனர், கதாசிரியர், சிறந்த இலக்கிய விமர்சிகர். அர்ச்சுனன் தர்மயுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி, பாரதப் போரில் கர்ணனைக் கொல்ல செய்தானா? என்ற கருத்தை, உள்ளடக்கி அருமையான விமர்சன நூலை எழுதியுள்ளார். சிட்டுக் குருவியின் தாவல்போல் சின்னச் சின்ன அழகு வாக்கியங்கள். மதுரமான நடை. புராண இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு.   —-   புதிய நோக்கில் புறநானூறு, பூவை அமுதன், அருள் […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், வாலி, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தரராஜன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html சிறுகதையோ, நெடுங்கதையோ இருந்தால் சவுக்காயிருக்க வேண்டும் அல்லது சவுக்காரமாய் இருத்தல் வேண்டும். இதுதான் சிறுகதைகளுக்கு வாலி சொல்லும் இலக்கணம். இத்தொகுப்பு முழுதும் அந்த நெடிதான் தூக்கல். சங்கீதத்திற்கு ஜாதி மதம் கிடையாது என்பதை ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குருவை வைத்து, கோவிந்த நம்பூதிரியின் ஜாதி வெறியை சவுக்கால் அடித்திருக்கும் அது […]

Read more

அகம் பொதிந்தவர்கள்

அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 160, விலை 75ரூ. மகாகவி பாரதியார் தொடங்கி எழுத்தாளர் மாஜினி வரை தன் மனம் கவர்ந்த, தான் நேரில் பார்த்துப் பழகிய, பழகத் தவறிய 26, எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள், அவர்களைப் பற்றிய தனது கருத்துகள் போன்றவற்றை சுவையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். எழுத்தாளர்கள் எழுதிய நூல்களின் பட்டியல், அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு போன்ற தெரிந்த தகவல்களையே சொல்லி நம்மைச் சலிப்படைய வைக்காமல், அவர்களை தான் சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள், […]

Read more

சாந்திவனத்து வேர்கள்

சாந்திவனத்து வேர்கள், ஆ. திருநாவுக்கரசு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 182, விலை 100ரூ. கிராமத்துக்கு அடிமைச் சேவகமும், சுடுகாட்டுப் பணிகளும் செய்து வாழ்கிற வெட்டியான் சங்கிலியின் குடும்பம், சாதீய ஒடுக்கு முறையால் சிதைக்கப்படுகிற அவலத்தை, மிக யதார்த்தமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். அவர்களோடு தங்கியிருந்து, தொழிலில், அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களை நேரடியாகக் கண்டு, கேட்டு, இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். உள்ளத்தை உருக்கும் நாவலைப் படிக்கும்போது, படிப்பவர் இதயம் கணக்கவே செய்யும். -சிவா. நன்றி; தினமலர், 23/6/2013.   —-   அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் […]

Read more