சித்த வைத்திய முறைகள்

சித்த வைத்திய முறைகள், தொகுப்பாசிரியர் லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், பக். 184, விலை 120ரூ. அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், அலோபதி மருந்துகளை வியாபாரம் செய்து, பெருமளவில் சம்பாதிக்கச் சதித்திட்டம் தீட்டிச் செயல்படுகின்றன. இந்நிலையில் அலோபதி டாக்டரான c.அம்பிகாபதி M.B.B.S., D.L.O.. இந்தியாவின் பாரம்பரிய சித்தா மருத்துவத்தின் சிறப்பை உணர்ந்து, அதையும் கற்று, அதன் அடிப்படையிலேயே பல வருடங்களாக மக்களுக்கு மருத்துவப் பணியாற்றி வருகிறார். இது கவனிக்கத் தக்க, பாராட்டத்தக்க விஷயமும் கூட. தவிர, இந்த […]

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், விக்ரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் வான் பிராக் என்ற ஆவியுலக ஆராய்ச்சியாளரின் அனுபவங்களைச் சொல்லும் இடங்கள் பிரமிப்பு. அவரைப்போலவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர்களையும் அவர்களது அனுபவங்களையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். அந்த வகையில் ஆவியுலகத்துறையில் ஆர்வமுள்ள தமிழ் வாசகர்களை உலக அளவில் அழைத்துச் செல்லும் முயற்சி இது. படிக்கப்படிக்க சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

மாணவர்களுக்காக மகாத்மா

மாணவர்களுக்காக மகாத்மா, எம்.எல்.ராஜேஷ், ஸ்ரீராம் பப்ளிகேஷன்ஸ், திருவள்ளூர் மாவட்டம், பக். 42. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு பலருக்கு வாய்ப்பதில்லை. அதனால் அவரது வரலாற்றைச் சுருக்கி, சித்திரக் கதைகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். குழந்தைகள் உட்பட அனைவரின் மனதிலும் எளிமையாக பதியும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி இது. நூலைப் படித்து முடித்ததும் காந்தியடிகளின் வாழ்க்கை வெறும் வரலாறு அல்ல. அது அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை என்பதை உணரவைத்துள்ளார் நூலாசிரியர். காந்தியின் அன்பு, அகிம்சை, சகோதரத்துவம், அவர் மக்களுக்காக போராடிய சரித்திர […]

Read more

தமிழில் முதல் சிறுகதை எது

தமிழில் முதல் சிறுகதை எது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 40ரூ. எழுத்துலகில் புகழ் பெற்ற டாக்டர் ஆர்.எஸ். ஜேக்கப் தமிழில் வந்த முதல் சிறுகதை எது? எழுத்தாளர் யார்? என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதியிருக்கும் இந்த நூல் சிறுகதை இலக்கியத்தின் பெருமைக்குரிய பக்கங்கள். 1877ம் ஆண்டில் கிறிஸ்தவ பாதிரியார் சாமுவேல் பவுல் ஐயர் எழுதிய சரிகைத் தலைப்பாகை தான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்பதை காரண, காரியங்களுடன் விவரிப்பவர், அதைக் கூட ஆய்வாளர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறார். தகுதிக்கு […]

Read more

தமிழர் தளபதிகள்

தமிழர் தளபதிகள், புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 70ரூ.   To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html களம் புகுந்து போரிடும் கரி, பரி, தேர், காலான் என்ற நாற்படையினும், அந்நாற்படையைக் காலமும், இடமும் அறிந்து, களம் புகுந்து வெற்றி கண்ட தமிழர் தளபதிகள், அதியன் துவங்கி, குதிரை மலைப்பிட்டன், கோடைப் பொருநன், திருக்கண்ணன், வில்லவன் கோதை, பரஞ்சோதியார், கருணாகரன் இவ்விதமாக 16 தளபதிகளின் சுருக்க […]

Read more

1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்

1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள், திருவாரூர் அர. திருவிடம், நக்கீரன் பதிப்பகம், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ. மறைந்த பிரதமர் இந்திராகாந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். அப்போது டெல்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் சந்தித்த கொடூரம், வெளிநாடுகளில் வாழ்ந்த சீக்கியர்களின் மனநிலை ஆகியவற்றை நூலாசிரியர் ஒரு திரைக்கதைபோல விவரித்துள்ளார். நூலின் ஆரம்பமே ஒரு எதிர்பார்ப்பை விளக்குவதாக இருக்கிறது. நேருவுக்கு பிறகு இந்திராகாந்தி இந்திய அரசியலில் பெற்ற முக்கியத்துவம், அவர் எடுத்த முற்போக்கான நடவடிக்கைகள் விரிவாக […]

Read more

நுனிப்புல் மேய்தல்

நுனிப்புல் மேய்தல், சுவிஸ் மர்த்தி மாஸ்ரர், காந்தளகம், பக்.176, விலை 100ரூ. பிறந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து, அயல் நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள், அங்கே படும் அவலங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, அவற்றை எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர். படித்தால், இதயத்தைக் கனக்கச் செய்யும் புத்தகம். -சிவா.   —-   ஜோதி நுணுக்கங்கள், டி.கே. சந்திரசேகரஐயர், மேகதூதன் பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. ஒருவரது ஜாதகத்தின் மூலம் ஜனன காலத்திலிருந்து, பலன்களை அறிவதற்கான மிக முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்களை (ராசி, திதி, […]

Read more

எம்.எஃப். உசேன் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடி

எம்.எஃப். உசேன் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடி, ஓவியர் புகழேந்தி, தூரிகை, குக 63, 3வது தெரு, முதல் செக்டார், கலைஞர் நகர், சென்னை 78, விலை 175ரூ. ஆய்வுநூல் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடியான எம்.எஃப். உசேன் பற்றி ஓவியர் புகழேந்தி எழுதியிருக்கும் இந்த நூல் ஒரு நூற்றாண்டு இந்திய ஓவியக்கலையின் பல்வேறு கூறுகளை உசேனின் வாழ்க்கையின் வழியாகக் கூறுகிறது. இந்தூருக்கு அருகே எளிய போரா இஸ்லாமியச் சமூகத்தில் பிறந்த உசேன் எந்த ஓவியக்கல்லூரியிலும் சேர்ந்து முறைப்படி பயிலவில்லை. ஆனால் அவருடைய 100 […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி. கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகளான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஙனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்தபோது, ஜாம்பவனான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்துகொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார்.அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், மேகதூதன் பதிப்பகம், 7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 250ரூ. ஆவிகளுடன் பேசும் நுட்பங்கள், தியான முறைகள், நம் வாழ்வில் ஆவிகள் எப்போதும் நுழையும் என்பது போன்ற தகவல்களைத் தருகிறது இப்புத்தகம். ஆவி மீடியாவான ஜேம்ஸ், வான் பிராக், நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மக்களின் கேள்விகளுக்கு ஆவிகளிடம் நேரடியாகக் கேட்டு, பதில் பெற்றுத் தந்தது. உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதுவே முதல் முறை. ஆவிகள் குறித்து மக்களிடம் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. ஆவிகள் உலகம் […]

Read more
1 2