நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள்

நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள், சந்திரசேகர், நக்கீரன் பதிப்பகம், விலைரூ.75. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். ரசிகத்தன்மையுடன் இணைந்து, வியப்புடன் சேர்ந்து தெளிந்து எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசியல் கட்சி ஆரம்பித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களையும், அனுபவங்களையும் இந்த நுால் பகிர்கிறது. இதுவரை கேள்விப்பட்டிராத பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. சுவாரசியம் தரும் நுால். – விநா நன்றி: தினமலர், 2/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்

ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள், பதிப்பக வெளியீடு, நக்கீரன் பதிப்பகம், விலைரூ.225. இந்தியாவின் இளம் அரசியல் தலைவர் ராஜிவ் கொலை பின்னணியில், பல உறுத்தலான காட்சிகள் ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளன. புலனாய்வு இதழியல் என்ற தன்மையில் சாதாரண பொதுமக்களுக்கு, ராஜிவ் படுகொலையில் தொடர்புடைய அனைத்து வகை தகவல்களையும் வழங்கியுள்ளது. ஒவ்வொரு குறிப்புகளும், படங்களும், தேதி மற்றும் நேரம் வாரியாக மிகவும் துல்லியமாக அச்சேற்றியுள்ளனர்.இதை முழுமையாகப் படித்து முடித்தால், ராஜிவ் படுகொலைக்கான காரணமாகப் பலதரப்பட்ட பிரச்னைகள் புதிய கண்ணோட்டங்களாக விரியும். இந்திய மக்களுக்குப் பல உண்மைகள் இன்னமும் […]

Read more

திராவிட ஆட்சி 50

திராவிட ஆட்சி 50, லெனின், நக்கீரன் பதிப்பகம், விலைரூ.200 திராவிட கட்சிகளின் ஆட்சி தொடர்பாக, 48 பேரின் கட்டுரைகள் தொகுப்பு. ஆட்சியாளர்களின் பலம், பலவீனங்கள் காணக் கிடைக்கிறது. தமிழகத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, ஆட்சிக் காலத்தை பகுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ‘ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பணம் சம்பாதிக்க தொடங்கிய காலம் உதயமானது…’ என, எழுதியுள்ளார். கடந்த, 1967-ல் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தார்; தி.மு.க., 19 ஆண்டுகளும், அ.தி.மு.க., 31 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளன. இரண்டையும் சம தட்டில் வைப்பதோ, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளை […]

Read more

நக்கீரன் இயர்புக் 2019

நக்கீரன் இயர்புக் 2019, நக்கீரன் பதிப்பகம், விலை 160ரூ. சமூக அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமல்லாமல், அறிவுக் கடலில் முத்தெடுக்கும் இதழாக மலர்ந்து மணம் வீசும் நக்கீரனுக்கு, சிகரத்தைத் தொடுமளவிற்கு சிறப்பு சேர்க்கிறது இந்நுால். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல தற்கால நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், விருதுகள், விளையாட்டுகள், உலகச் செய்திகள் உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. பொது அறிவு உலகமாகிய இந்நுால், எக்காலத்திலும் மாணவச் செல்வங்களுக்கு பயன் தரும் வகையில் வாழையடி வாழையாக அமைந்துள்ள […]

Read more

ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?

ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?, ஆதனூர் சோழன், நக்கீரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. ஜி.எஸ்.டி. மூல காரணம் யார்? கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு, பெருமுதலாளியின் எடுபிடியா மோடி? எல்லா பிரச்னைகளுக்கும் ஜி.எஸ்.டி. மருந்தா? வேலையின்மையை அதிகரிக்கும் மோ(ச)டித் திட்டங்கள், ஜி.எஸ்.டி.யும் மருந்து தட்டுப்பாடும், வரி விகிதங்கள் ஆகியவற்றை படங்களுடன் விவரிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 10/9/2017.

Read more

மாவலி பதில்கள்

மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

நினைவில் நிலைத்தவர்கள்

நினைவில் நிலைத்தவர்கள், வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. எழுத்தாளர்கள் பொன்னீலன், மெர்வின், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், நாட்டுப்புற இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி உள்பட 29 பிரமுகர்களின் சிறப்பை விவரிக்கிறார் நூலாசிரியரும், பத்திரிகையாளருமான அகநம்பி. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் […]

Read more

ஆனந்த யாழ்

ஆனந்த யாழ், ஆரூர் தமிழ்நாடன், நக்கீரன் பதிப்பகம், பக். 264, விலை 170ரூ. திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் அறியப்பட்ட நா.முத்துக்குமார், கடந்த ஆண்டு அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருடனான தங்களின் பழக்கத்தையும் நெருக்கத்தையும் அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், திரையுலகப் புள்ளிகள், அரசியல் பிரபலங்கள் போன்ற பல்வேறு துறையினரும் வெவ்வேறு ஊடகங்களில் பதிவு செய்ததன் தொகுப்புதான் இந்நூல். திரைப்படப் பாடலாசிரியராக பதினைந்தே ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும் அக்காலகட்டத்தில் ஏறக்குறைய 1500 பாடல்கள் எழுதியுள்ளார் என்பது வியப்பைத் தருகிறது. அவற்றில் பெரும்பாலான பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டவை […]

Read more

குஷ்பு பக்கம்

குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பதிப்பகம், விலை 120ரூ. தமிழகத்தில் நடிகையாக அறியப்பட்ட குஷ்பு, தற்போது அரசியல் களத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது கருத்துக்களைத் துணிவுடன் வெளியிடும் அவர் பெண்ணியப் போராளியாகவும் கருதப்படுகிறார். அவர் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகம், அரசியல், சினிமா தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அருமையாக அலசி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- I.A.S. தமிழ் முதல் தாள், பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன், மீனாட்சி புத்தக நிலையம், விலை 150ரூ. இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதுவோருக்காக […]

Read more

சினிமா சீக்ரெட்

சினிமா சீக்ரெட், கலைஞானம், நக்கீரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் நீண்ட அனுபவம் உடையவர் கலைஞானம். பட அதிபர், கதாசிரியர், வசன கர்த்தா, டைரக்டர் என்று பல முகம் படைத்தவர். பாதி கதை படமாக்கப்பட்ட பிறகு, சில படங்கள் மேலே நகர முடியாமல் நின்று விடுவது உண்டு. அப்போது கதையை ரிப்பேர் செய்ய பட அதிபர்கள் இவரைத்தான் அழைப்பார்கள். கலைஞானம் தமது அனுபவங்களை சினிமா சீக்ரெட் என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி வருகிறார். அவற்றை புத்தகங்களாக நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. […]

Read more
1 2