நம் குழந்தை பத்திரம்

நம் குழந்தை பத்திரம், அ.சங்கரலிங்கம், வாசகன் பதிப்பகம், விலைரூ.150 ‘நான் எப்படி படித்தாலும் மறந்து போய் விடுகிறது’ என, குழந்தைகளின் படிப்பு பயத்தின் பிரதிபலிப்புடன், ‘நம் குழந்தை பத்திரம்’ புத்தகம், பக்கங்களில் பாதம் பதித்து நடை பழகி வரிகளில் வாலிபனாகி ஓடுகிறது.பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும் என பக்கத்திற்கு பக்கம் எளிமையாக படிக்கும் முறைகளை தெளிவாக பதிவு செய்து உள்ளார் எழுத்தாளர் சங்கரலிங்கம். புத்தக பக்கங்களை ஆக்கிரமித்துள்ள ஒவ்வொரு தலைப்புகளும். இன்றைய கல்வி முறையை காட்டுகிறது என்றாலும், படிப்பு ஒரு சுமையா […]

Read more

மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழல்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழல், கோ.மாலினி சீதா, வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. உடலாலும் மனதாலும் சவால் விடப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நிலை புராதன காலம் முதல் இன்றுவரை எப்படியெல்லாம் உயர்வு பெற்றிருக்கிறது என்பதைச் சொல்லும் ஆய்வு ரீதியான நூல். உடல் சோதனையையும், மன வேதனையும் கடந்து சாதனை படைத்தவர்கள் பற்றிப் படிக்கும்போது மனதுக்குள் இனம்புரியாத நெகிழ்வு ஏற்படுவது நிஜம். நன்றி: குமுதம், 13/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மூங்கில் கனவுகள்

மூங்கில் கனவுகள், கி.பத்மநாபன், வாசகன் பதிப்பகம், பக்.112, விலை 80ரூ. ந்நுாலில் வெளியாகியுள்ள கவிதை வரிகள், முற்றிலும் பெண்களின் பெருமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றன. ‘அடகு’ என்ற கவிதையில் நடுத்தர குடும்பங்களின் இயலாமைகளை அருமையாகச் சொல்லி, உள்ளத்தை நெகிழ வைக்கிறார். மலைப்பாம்பால் வளைக்கப்பட்ட உயிரினமாய், நடுத்தர குடும்பங்கள் சிக்கி திணறும் அவலத்தை அப்பட்டமாய் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இரைப்பை – கருப்பை – இடைவெளி என்கிற சிந்தனை, இதுவரை நாம் படித்த உலக பெருங்கவிஞர்களின் கவிதைகளில் கூட படித்திராத ஒன்று. நன்றி: தினமலர், 28/10/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

வெளிச்சத்தைத் தேடி

வெளிச்சத்தைத் தேடி, கோ.ராமகிருஷ்ணன், வாசகன் பதிப்பகம், பக். 106, விலை 80ரூ. இந்த கவிதை தொகுப்பு நுாலில், பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும். இளைஞர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக இந்த சமுதாய மாற்றத்திற்கு, போராடுபவர்களாக இருக்க வேண்டும். ஜாதி, மதம் இல்லாத மனித மனம் வேண்டும் என்ற கருத்துக்களை, இவரது கவிதை முன்வைக்கிறது. குறிப்பாக, அருகம்புல் என்னும் கவிதை தலைப்பில், ‘மண்ணின் ஆதி மைந்தர்களே அருகம்புல்லாய் துளிர்த்தெழுவீர்! அகிலம் போற்ற வாழ்ந்திடுவீர்’  (பக்., 20) என்று இளைஞர்களை எழுப்பும் வரிகள் பாராட்டப்பட வேண்டியது. காவல் […]

Read more

ஜான்சிராணியின் குதிரை

ஜான்சிராணியின் குதிரை, தேவராஜ் விட்டலன், வாசகன் பதிப்பகம், பக்.64, விலை 50ரூ. கைப்பேசிகளின் அலறல்களும், கணினிகளின் இரைச்சல்களும் பல்கியிருக்கும் அலுவலகப் பரபரப்புக்கு மத்தியில் கொஞ்சமாவது ரசிக்கத்தான் முடிகிறது வாழ்க்கையை… அந்தக் குதிரையின் காலடி சப்தத்தில் ஒளிந்திருந்தது பல நுாற்றாண்டுகளின் சோகம்… எப்போதோ தொலைத்த பொழுதுகளும், உறவுகளின் நினைவுகளும் மழையின் வழியாய் மனதில் உயிர்த்தெழுகிறது…!’ என்ற கவிதை வரிகள், இன்றைய சமுதாய சூழலை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. நன்றி: தினமலர், 12/11/2017.

Read more

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல, ஏகலைவன், வாசகன் பதிப்பகம், விலை 70ரூ. கேள்விகள் கேட்கப் பழகுவோம், ஏளனங்களை ஏளனப்படுத்துவோம், தோல்விகளைத் தூர்வாருவோம், கோடுகளும் ஓவியமாகும், சாதனைகள் சாத்தியமே என்பன போன்ற தலைப்புகளில் கவிஞர் ஏகலைவன் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் நம் நெஞ்சில் நம்பிக்கை ஊட்டுகிறார். நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

ஒற்று

ஒற்று, அண்டோ கால்பட், வாசகன் பதிப்பகம், பக்.112, விலை 80ரூ. இந்தச் சின்னஞ்சிறு நாவல் நம்மை உருவாக்கிவிடுகிறது; உலுக்கி விடுகிறது. அம்மாவிடம் மகன் வைத்துள்ள உயர்ந்த அன்பைச் சொல்லும் உன்னதப் படைப்பு இது! ‘அம்மாவுக்கு இப்ப கேன்சர் ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல இருக்கு… அதிகபட்சம் இன்னும் மூணு மாசம் தான். குணப்படுத்துற கட்டத்தை அவங்க தாண்டிட்டாங்க’ என்கிறார் டாக்டர். தாயின் மரணத் தேதியை முன்கூட்டியே அறிந்து, வாழ்வதை விட ஒரு மகனுக்கு வேறு என்ன கொடுமை வாழ்வில் நேர்ந்துவிடும் என்று மகன் அழுகிறான். அம்மாவுக்கு […]

Read more

குற்றங்களே நடைமுறைகளாய்

குற்றங்களே நடைமுறைகளாய், ப. திருமலை, வாசகன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பாக, பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தமிழகத்தின் கல்வி அறிவு, குற்ற செயல்கள், விவசாய பிரச்னை, மழை, சூழியல் வன உயிர்கள் பாதுகாப்பு என, பல துறைச் சார்ந்த, 25 கட்டுரைகள், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ‘தமிழகத்தில், கடந்த, எட்டு ஆண்டுகளில், மட்டும் காணாமல் போன விவசாய நிலம், 13 லட்சம் ஏக்கர் ஆகும். ‘காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, […]

Read more

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன்

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன், கோ. ராஜசேகர், வாசகன் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. எரியும் அடுப்பாக அவள் வயிறும் அணைந்த நெருப்பாக அவள் கல்வியும் – என்று பெண் கல்வியின் நிலையை இதைவிட ஆணி அடித்த மாதிரி சொல்ல முடியாது. இப்படி நிறைய கவிதைகள் நிறைந்த நூல். இளம் கவிஞர்களுக்குப் பிடிக்கும். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

மனசெல்லாம்

மனசெல்லாம், கா.ந.கல்யாணசுந்தரம், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. கொக்கும் தூண்டிலும் அருகருகே தடுமாறும் மீன்கள் – என்ற ஹைக்கூ கவிதையில் உள்ள சிந்தனை ஒன்றுபோதும், சமூகத்தின் அதிகார வர்க்கத்தின் நிலையையும் அப்பாவி மக்களின் தடுமாறும் நிலையையும் எடுத்துக்காட்டு. அன்பு, சமூகம், உலகம், ஆன்மீகம், அறிவியல் என்று பலதரப்பட்ட சிந்தனைகளின் வெளிப்பாடு இக்கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more
1 2 3