ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

ஏற்றுமதி இறக்குமதி வணிகம், ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் , தமிழில் லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 250ரூ. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் குறித்து ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் எழுதிய நூல். இதைத் தமிழில் லயன் எம்.சீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார். அயல்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் கட்டமைப்பு, இறக்குமதி ஏற்றுமதி ஆவணங்களை தயாரிக்கும் முறை, சுங்க இலாகாசெயல்பாடுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சவால்கள் நிறைந்த பணியாகும். அதில் ஈடுபடுவோர் கையாள வேண்டிய நெறிமுறைகள் […]

Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள், டாக்டர் இரா. விருத்தகிரி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. குழந்தை வளர்ப்பு பற்றிய சிறந்த புத்தகம் இது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் எவை, அதற்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துள்ள உணவுகள் எவை என்பதையெல்லாம் விவரமாகப் படங்களுடன் விளக்குகிறார், டாக்டர் இரா. விருத்தகிரி.  ஆண், பெண் குழந்தைகள் வாலிப வயதை அடையும்போது, அவர்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அக்காலக்கட்டத்தில் பெற்றோர்களின் கடமை ஆகியவை பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். அளவிலும், […]

Read more

விடியலை நோக்கி

விடியலை நோக்கி, க. ராகிலா, வாசகன் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. ராகிலாவின் எழுத்து, லட்சிய எழுத்து. ஒவ்வொரு கதையும், ஒரு நீதியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் இந்தச் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். 18 சிறுகதைகள், இந்தத் தொகுதியில் இருக்கின்றன. எல்லாமே, மணி மணியான கதைகள். முதியோர் இல்லங்களில், பெற்றோரை தவிக்க விடாதீர்கள் என்று சொல்லும் முதல் கதையான, உறவுகள் பிரிவதற்கல்ல கதை அருமை. பல சிறுகதைகளில், அருமையான குணச்சித்திர வார்ப்புகள். குட்டச்சிக் கிழவி என்ற கதையில் வரும் […]

Read more

ஆறாம் திணை

ஆறாம் திணை, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 230, விலை 125ரூ. கைக்குத்தல் அரிசிக்கு ஈடாகுமா ஆஸ்திரேலிய ஓட்ஸ்? மருத்துவம் என்றால் மருத்துவம் மட்டும் தெரிந்தால் போதாது. சரிவிகித உணவை, எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும் என்ற கொள்கையில் தீராத பற்று உடையவர் போலும் புத்தகத்தில் புகுந்து விளையாடிவிட்டார் மருத்துவர் சிவராமன். மருத்துவத்தினூடே, உணவு பொருட்களின் பயன்பாட்டையும், அதை பக்குவப்படுத்தும் விதத்தையும் சொன்னவர், மேலை நாட்டு நாகரிக மோகத்தில் விழுந்து, மக்கள் புரள்வதை கண்டு சகியாதவராய், […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, பக். 512, விலை 217ரூ. நம்முடைய பண்டைய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் மிகச் சிறந்த நீதியைக் கூறும் நூல்கள். ஒவ்வொரு தருமத்தையும் விரித்துக் கூறுவது புராணம். அநேக அறங்களை உணர்த்துவது இதிகாசம். மகாபாரதத்தில் அடங்காத அறமே இல்லை என்று கூறுவர் முன்னோர். வியாச முனிவர் கூற, விநாயகப் பெருமானே தன் திருக்கரங்களால் எழுதிய இதிகாசம் மகாபாரதம் என்பதால், இதன் பெருமையை விரித்துரைப்பது யாராலும் இயலாத ஒன்று. பறவைகள் வந்து ஆலமரத்தில் தங்குவது […]

Read more

கதைகள் வழி கொன்றை வேந்தன்

கதைகள் வழி கொன்றை வேந்தன், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ. ஔவையாரின் கொன்றை வேந்தன் என்ற நீதி நூலின் வழி நின்று 16 கதைகளை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். கதைகள் வழியாக அறிவுரைகளைச் சொன்னால் சிறுவர், சிறுமியர் மனங்களில் கதையும் கருத்தும் பதியும். அவர்கள் நல்வழியில் நடக்கத் தூண்டுதலாக அமையும் என்ற நூலாசிரியரின் எண்ணம் ஈடேறியுள்ளது. கொன்றை வேந்தனில் வரும் அறிவுரைகளையே கதைகளுக்குத் தலைப்பாக வழங்கியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- குறையொன்றுமில்லை, கவிஞர் […]

Read more

இந்தியர்களின் போலி மனசாட்சி

இந்தியர்களின் போலி மனசாட்சி, மனுஷ்யபுத்திரன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-5.html நாட்டு நடப்பு பற்றி மனதைத் தொடும் வண்ணம் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் மனுஷ்யபுத்திரன் எழுதியு புத்தகம் இது. காவு கேட்கும் சாதி அரக்கன், கமலை எதிர்ப்பது நியாயமா?, நீதியை அழிக்கும் சட்டங்கள், ராஜபக்சே நடத்தும் உளவியல் யுத்தம், வினேதிகளுக்கு விடிவு உண்டா?, மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் இத்தகைய தலைப்புகளில் 40க்கும் மேற்பட்ட […]

Read more

பாரதத்தின் பேரரசி

பாரதத்தின் பேரரசி (சாதனை வரலாறு), அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 504, விலை 360ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-4.html முதல்வர் அம்மாவின் வாழ்க்கை சரிதத்தை புதுக்கவிதை நடையில் தந்துள்ளார் கவிஞர் அழகிய பாண்டியன். அம்மாவின் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள், இடையூறுகள், சூழ்ச்சிகள், சோதனைகள் என்று ஒன்றுவிடாமல் அலசி, அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் காட்டிய அவரது வீரத்தையும் காட்டி, அவரை பாரதத்தின் பேரரசியாக நம்முன் […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்தக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ. இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம் மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது. ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களினால் பொதுவாக நன்மைகள் […]

Read more

கம்பன் பிறந்த தமிழ்நாடு

இவர்களும் நானும், ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோவில் தெரு, இரண்டாம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5, விலை: ரூ. 70. தன் மனம் கவர்ந்தவர்கள், சாதனையாளர்கள் பற்றி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய புத்தகம். நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் பற்றி எழுதியிருப்பதைக் கூட ரசித்துப் படிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறப்பான நடை. — பரமரகசியம் (பாகம் 1), ராஜா சுப்பிரமணியன், சநாதநா பதிப்பகம், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், […]

Read more
1 2 3