அறிவும் பகுத்தறிவும்

அறிவும் பகுத்தறிவும், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, விலை 30ரூ. அறிவுத் தொடர்பான 6 கதைகளும், பகுத்தறிவுத் தொடர்பாக 6 கதைகள் அடங்கிய நூல். ஓவியங்களுடன் சிறுவர்களுக்கு பயனுள்ள வகையில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி.   —- காலம் வெளி மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள், தேவரசிகன், தமிழாசை பதிப்பகம், திருபுவனம், விலை 80ரூ. வித்தியாசமான தலைப்பில், எளிமையான உணர்வுகளைப் பேசுகிற பாசாங்கற்ற பல நல்ல கவிதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி.

Read more

சுந்தர வால்மீகி ராமாயணம்

சுந்தர வால்மீகி ராமாயணம், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 450ரூ. ராமாயணம், பாரத தேசத்தின் தலைசிறந்த இதிகாசங்களில் ஒன்று. ராமாயணம்தானே, எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனலாம். ஆனால் இந்நூல் முழுமையையும் படித்து முடித்தால், ராமாயண நிகழ்வுகளுக்கு இத்தனை அர்த்தங்கள் உள்ளனவா, நிகழ்வுகளுக்குள் இத்துணை சூட்சுமங்களும், ரகசியங்களும் உள்ளனவா என்று அதிசயிக்கத் தோன்றும். ராமஜென்ப பூமியான அயோத்தியில் துவங்கி, சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்த அசோக வனம் வரையில் உள்ள பெரும்பாலான ராமாயண நிகழ்விடங்களுக்குச் சென்று அந்தந்த சேத்ரங்களில் அந்தந்த தலங்களில், அந்தந்த தீர்த்தங்களில், அந்தந்த […]

Read more

கதைகள் வழி கொன்றை வேந்தன்

கதைகள் வழி கொன்றை வேந்தன், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ. ஔவையாரின் கொன்றை வேந்தன் என்ற நீதி நூலின் வழி நின்று 16 கதைகளை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். கதைகள் வழியாக அறிவுரைகளைச் சொன்னால் சிறுவர், சிறுமியர் மனங்களில் கதையும் கருத்தும் பதியும். அவர்கள் நல்வழியில் நடக்கத் தூண்டுதலாக அமையும் என்ற நூலாசிரியரின் எண்ணம் ஈடேறியுள்ளது. கொன்றை வேந்தனில் வரும் அறிவுரைகளையே கதைகளுக்குத் தலைப்பாக வழங்கியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- குறையொன்றுமில்லை, கவிஞர் […]

Read more