உன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்

உன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலைரூ.190 பக்தி பெருக்கெடுத்து ஓடும் வைணவத் தலங்களில், சிறந்த கிருஷ்ணர் கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரும், கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுபியும் தான். உடுபி கிருஷ்ணரை பலர் தரிசித்திருக்கலாம். எனினும், கோவில் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த குறையை போக்கும் வகையில், உடுபி கிருஷ்ணர் பற்றி மிக விரிவாக, தெளிவாக ஆசிரியர் எழுதியுள்ளது பிரமிக்க வைக்கிறது. இந்த புத்தகத்தை படித்தால், உடுபி […]

Read more

அஷ்டபதி (கீதகோவிந்தம்)

அஷ்டபதி (கீதகோவிந்தம்), அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 100ரூ. கிருஷ்ண பகவான் மீது ஜயதேவ சுவாமிகள் பாடிய பாடல்களே “கீதகோவிந்தம்” ஆகும். கீத கோவிந்தம் காவியத்துக்கு, “அஷ்டபதி” என்ற பெயரும் உண்டு. அஷ்டபதியை பாராயணம் செய்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்தப் புத்தகத்தில், ஐயதேவ சுவாமிகள் வரலாறு முதலில் இடம்பெற்றுள்ளது. அதையடுத்து, அஷ்டபதி பாடல்களுக்கு விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

சுந்தர வால்மீகி ராமாயணம்

சுந்தர வால்மீகி ராமாயணம், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 450ரூ. ராமாயணம், பாரத தேசத்தின் தலைசிறந்த இதிகாசங்களில் ஒன்று. ராமாயணம்தானே, எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனலாம். ஆனால் இந்நூல் முழுமையையும் படித்து முடித்தால், ராமாயண நிகழ்வுகளுக்கு இத்தனை அர்த்தங்கள் உள்ளனவா, நிகழ்வுகளுக்குள் இத்துணை சூட்சுமங்களும், ரகசியங்களும் உள்ளனவா என்று அதிசயிக்கத் தோன்றும். ராமஜென்ப பூமியான அயோத்தியில் துவங்கி, சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்த அசோக வனம் வரையில் உள்ள பெரும்பாலான ராமாயண நிகழ்விடங்களுக்குச் சென்று அந்தந்த சேத்ரங்களில் அந்தந்த தலங்களில், அந்தந்த தீர்த்தங்களில், அந்தந்த […]

Read more

ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம்

ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம், ஸ்ரீஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீ பாதங்களவர்கை ஸ்ரீமத் உத்தராதி மடாதீஸர், தொகுப்பாசிரியர் எல். லஷ்மி நரசிம்ஹன், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 150ரூ. பவிஷ்யோத்தர புராணம் திருப்பதிக்கு யுகக் கிரமமாக ரிஷபாசலம், அஞ்ஜனாசலம், சேஷசலம், வேங்கடாசலம் என்ற நான்கு பெயர்கள் வந்தன என்று சொல்கிறது. வராக புராணம் இன்னும் பதினான்கு பெயர்களைச் சொல்கிறது. இஷ்ட்டப்பட்டதையெல்லாம் கொடுப்பதால் அந்த பர்வதத்திற்கு சிந்தாமணி என்று பெயர். ஞானத்தைக் கொடுப்பதால் அது ஞானாசலம். எல்லா தீர்த்தங்களின் சன்னிதானத்தைக் கொண்டிருப்பதால் அது தீர்த்தாசலம். […]

Read more

நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு

நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு, Dr.C.S. ராஜு, டி.வி. சிவக்குமார், மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண். 1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 192, விலை 100ரூ. கூட்டுக்குடும்பங்கள் இருந்த காலத்தில் எளிதாக இருந்த பிள்ளைகள் வளர்ப்பு, தனிக்குடுத்தனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் கஷ்டமாகிவிட்டது. தவிர, பிள்ளைகளை ஒழுக்கமானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், ஆராக்கியமானவர்களாகவும்கூட வளர்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக, இன்றைய பெற்றோர்களுக்கு சம்பாதிப்பதிலும் மற்ற பிரச்னைகளை சமாளிப்பதிலும் இருக்கும் ஞானம், பிள்ளைகள் வளர்ப்பு விஷயத்தில் போதிய அளவு இல்லை. விளைவு, பிள்ளைகளின் […]

Read more

கொங்கு நாட்டுப்புறக் கதைகள்

கொங்கு நாட்டுப்புறக் கதைகள், தி.பெரியசாமி, காவ்யா, சென்னை 24, பக். 176, விலை 135ரூ. மனிதவாழ்வின் பல்வேறு உணர்வுப் பூர்வமான பகுதிகளை எந்தவித அலங்காரமுமில்லாமல் வெளிப்படுத்துபவை நாட்டுப்புறக் கதைகள். இந்நூலில் 110 கொங்கு நாட்டுப்புறக் கதைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கிராமத்து மக்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் பல ஆண்டுகளாகச் செவி வழியாகக் கூறப்பட்ட கதைகளை, அவற்றின் சுவை குன்றாமல் எழுத்துவடிவில் தந்திருக்கிறார் நூலாசிரியர். அன்பு, நேர்மை, ஒழுக்கம், தியாகம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளைக் கொண்ட மனிதர்களையும், சுயநலம், துரோகம், […]

Read more

என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை 5, பக். 184, விலை 150ரூ. ஆண்டாள் அளித்த வாசகம் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது. ஆன்மரீதியாக இறைவனுடன் கட்டுண்ட அடியார்களுக்கு நேரும் சிலிர்க்கும் அனுபவங்களை உணர்பவர்கள் இப்படியே கூறுவர். இநத் நூலில் அப்படிப்பட்ட சிலிர்க்கும் ஆன்ம அனுபவக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிக மாத இதழில் எழுதப்பட்ட 20 கட்டுரைகளின் தொகுப்பு நூலான இதில், ஆண்டாளைப் பற்றிய கட்டுரையுடன் துவங்குகிறது. குரு ராகவேந்திரர் வாழ்க்கை, திருக்கச்சி நம்பிகளும் வரதராஜப் பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணர், ஜாம்பவானின் […]

Read more

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 408, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html தமிழர்களையும் சிற்பக்கலைகளையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத காரியம். சொற்களில் இலக்கிய வண்ணத்தையும், கற்களில் கலை வண்ணத்தையும் கண்டவர்கள் தமிழர்கள். கோவில் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றை பக்தி, அழகியல் உணர்வு, கலை போன்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும் பார்வை உள்ளது. இவற்றையும் மீறி அவற்றில் சமூகத்தின் உளவியல் ரீதியான பால், பாலியல் வேறுபாடுகள் […]

Read more