ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம்

ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம், ஸ்ரீஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீ பாதங்களவர்கை ஸ்ரீமத் உத்தராதி மடாதீஸர், தொகுப்பாசிரியர் எல். லஷ்மி நரசிம்ஹன், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 150ரூ. பவிஷ்யோத்தர புராணம் திருப்பதிக்கு யுகக் கிரமமாக ரிஷபாசலம், அஞ்ஜனாசலம், சேஷசலம், வேங்கடாசலம் என்ற நான்கு பெயர்கள் வந்தன என்று சொல்கிறது. வராக புராணம் இன்னும் பதினான்கு பெயர்களைச் சொல்கிறது. இஷ்ட்டப்பட்டதையெல்லாம் கொடுப்பதால் அந்த பர்வதத்திற்கு சிந்தாமணி என்று பெயர். ஞானத்தைக் கொடுப்பதால் அது ஞானாசலம். எல்லா தீர்த்தங்களின் சன்னிதானத்தைக் கொண்டிருப்பதால் அது தீர்த்தாசலம். […]

Read more

சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்

சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 295ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-227-7.html ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி? இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் […]

Read more

குழந்தைகள் நலம்

குழந்தைகள் நலம், டாக்டர் க. ராஜேந்திரன், தமிழ்ப் பண்பாட்டு மையம், கோவை, பக். 380, விலை 200ரூ. இந்த நூலில் ஆசிரியர், தாயின் கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு 18 வயது ஆகும் வரையிலும், சிசு வளர்ப்பு, உணவு முறைகள், தடுப்பு ஊசி, குழந்தையின் வளர்ச்சி நிலைகள், பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி, விரிவாக எளிதாகச் சொல்கிறார். விலையும் மலிவு. தாய்மார்கள் அவசியம் படிக்க வேண்டிய மருத்துவ நூல். -எஸ். குரு. நன்றி: தினமலர், 20/4/2014.   —- ஜோதிட சகலாதிகாரம், […]

Read more

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள், ஆர். குமரேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 128, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-853-4.html நலிந்து வரும் விவசாயத் தொழிலால் அன்றாடத் தேவைகளையே சமாளிக்க விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில் சுயதொழில் மூலம் வருமானம் பெறுவதற்கான வழிகளைத் தெரிவிக்கிறது இந்த நூல். வாழ வழி தேடி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதைத் தவிர்க்க சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் குறைந்த இட வசதியில், ஓய்வு நேரத்தை […]

Read more

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 408, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html தமிழர்களையும் சிற்பக்கலைகளையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத காரியம். சொற்களில் இலக்கிய வண்ணத்தையும், கற்களில் கலை வண்ணத்தையும் கண்டவர்கள் தமிழர்கள். கோவில் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றை பக்தி, அழகியல் உணர்வு, கலை போன்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும் பார்வை உள்ளது. இவற்றையும் மீறி அவற்றில் சமூகத்தின் உளவியல் ரீதியான பால், பாலியல் வேறுபாடுகள் […]

Read more

ஊமையன் கோட்டை

ஊமையன் கோட்டை, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 70ரூ. To buy this Tamil book  online – www.nhm.in/shop/100-00-0001-136-2.html ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை […]

Read more

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு, பெ. ஹரி கிருஷ்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 134, விலை 55ரூ. பல நட்சத்திரக் குடும்பங்கள் அடங்கியது காலக்ஸி, பல காலக்ஸீஸ் கொண்டது பிரபஞ்சம். இருண்ட வெளியல் சிதறிக் கிடக்கும், வான் துகள்களிலிருந்து இறைவன் உருவாக்கியது. பிரபஞ்சம் என்பது ஆசிரியரின் வாதம், ஒவ்வொரு மதத்திலும், இறைவனுக்கு ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்து மதத்தில் சிவம் என்றும், பரமாத்மா என்றும் அழைக்கின்றனர். இந்தப் புத்தகத்தில் ஆத்மாவை மையப்படுத்தி, ஆசிரியர் இறைவனை உணர்த்தியிருக்கிறார். ஆன்மிகத் […]

Read more

விருட்சம் கதைகள்(தொகுதி 1)

விருட்சம் கதைகள்(தொகுதி 1), அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-135-6.html சில சிறுகதைகளை ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் வெளியிடமுடிவதில்லை. அப்படி வெளிவராமைக்கு இதழ் சூழலில் நிறைய காரணங்கள் உண்டு. அதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு விருட்சம் கதைகள் தொகுதி 1. 1990ஆம் ஆண்டில் வெளியான இத்தொகுப்பு இப்போது இரண்டாம் பதிப்பாக வெளியிகியிருக்கிறது. இக்கதைகள் வெகுஜன இதழில் இடம் பெறாதது. இந்த நூல் 300 பிரதிகள் மட்டுமே 2012 டிசம்பரில் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அஜீத் […]

Read more

ஒன்றே உலகம்

ஒன்றே உலகம், தனிநாயக அடிகள், தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 264, விலை 170ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தனிநாயக அடிகளாரின் சுற்றுப் பயணத்தில் கிடைத்த அரிய தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு வந்த நூலே ஒன்றே உலகம். இலங்கையில் பிறந்த அடிகளார் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தமிழ் குறித்து சொற்பொழிவுகளை நடத்தி தமிழின் இனிமையை உலகறியச் செய்துள்ளார். கிழக்கு ஜெர்மனியின் டாக்டர் லேமன் சீர்காழியில் ஏழாண்டுகள் தங்கி தமிழ் ஆராய்ச்சி மேற்கொண்டது. திருக்குறளையும், […]

Read more

உகரச்சுட்டு

உகரச்சுட்டு, முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பாலாஜி நகர், புழுதிவாக்கம், சென்னை 91, பக். 112,விலை 80ரூ. தமிழ்மொழியில் அ, இ, உ என மூன்ற சுட்டெழுத்துக்கள் உள்ளன, இந்தியாவில் உள்ள பிற மொழிகளில் அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. அ என்னும் சுட்டெழுத்து அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும் இ என்னும் சுட்டெழுத்து இவன் இவ்வீடு என அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். உ என்னும் சுட்டெழுத்து தற்காலத்தில் பேசப்படுவதில்லை. உ என்னும் சுட்டெழுத்து தொலைவுக்கும் அருகுக்கும் […]

Read more
1 2