காலம் தந்த காமராசர்

காலம் தந்த காமராசர், முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. ஆறு வயதில் தந்தையை இழந்த ஏழைச் சிறுவன், இந்திய விடுதலைக்காக உழைத்து, அக்டோபர் மாதம் காந்தியடிகள் பிறந்த நாளில், உலக வாழ்வை துறந்தவரின் வரலாற்றை சொல்லும் நுால். முதல்வர் பதவியை துறந்து, நாட்டுக்காகப் பாடுபட்டவர் தான் கர்ம வீரர் காமராஜர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த நேருவுக்கு ஆலோசனை கூறும் திறனுடன் விளங்கினார். மூன்று முறை தமிழகத்தின் முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர். கடைசி […]

Read more

குருவிக்கூடு

குருவிக்கூடு, கோவன் பதிப்பகம், சென்னை, விலை120ரூ. பத்திரிகைகளில் சிறுகதை வெளிவருவது குறைந்துவிட்டது. ஆனால் சிறுகதை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை. அப்படிப்ட்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியும், தெவிட்டாத இன்பமும் அளிக்கக்கூடியது பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான முகிலை இரா. பாண்டியனின் குருவிக்கூடு சிறுகதைத் தொகுதி. கதைகள் ஒவ்வொன்றும் மனதை வருடுகின்றன. எனினும் பாரம் என்ற சிறுகதை புதிய உச்சத்தைத் தொடுகிறது. ஜான் என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பற்றிய கதை. பிறருக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட தங்களுக்கு இக்குழந்தை ஏன் பிறந்தது? தங்களுக்குப் பின் அக்குழந்தையைக் காக்கப்போவது […]

Read more

குருவிக்கூடு

குருவிக்கூடு, முகிலை ராசபாண்டியன், கோவன் பதிப்பகம், சென்னை, பக். 158, விலை 120ரூ. பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், கதை வாசிப்பிலும் பயன்படுத்தப்பட்ட கதைகள் இவை. மனதில் சிந்தனை அலைகளை வெகுவாகத் தூண்டிவிடும் ஆற்றல் பெற்றவை. மனிதநேயம் பாதுகாக்கப்பட வேண்டும், மதங்கள் பாலங்களாக இருக்க வேண்டுமே தவிர, வேலிகளாக இருக்கக்கூடாது என வலியுறுத்தும் கதைகள். மதங்களைக் கடந்து மற்றும் சப்பரம் எடுப்பு, ஒரு சிறிய குழந்தையின் பெரிய மனதைச் சொல்வது, பொய் என்ற கதை. பாத்திரம் பார்த்து என்ற கதையும் மனிதம் பெரிதா, மதநேசம் பெரிதா என்ற […]

Read more

உகரச்சுட்டு

உகரச்சுட்டு, முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பாலாஜி நகர், புழுதிவாக்கம், சென்னை 91, பக். 112,விலை 80ரூ. தமிழ்மொழியில் அ, இ, உ என மூன்ற சுட்டெழுத்துக்கள் உள்ளன, இந்தியாவில் உள்ள பிற மொழிகளில் அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. அ என்னும் சுட்டெழுத்து அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும் இ என்னும் சுட்டெழுத்து இவன் இவ்வீடு என அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். உ என்னும் சுட்டெழுத்து தற்காலத்தில் பேசப்படுவதில்லை. உ என்னும் சுட்டெழுத்து தொலைவுக்கும் அருகுக்கும் […]

Read more

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷினி, மித்ரஸ் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. மனிதனாய், மாமனிதனாய் டி.கே.சி. தடம் பதித்த தன்மையைத் தடம் பதித்த மாமனிதன் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் தி. சுபாஷினி. டி.கே.சியும் சான்றோர்களும் என்னும் பகுதியில் டி.கே.சி.யால் மதிக்கப் பெற்ற வள்ளுவர், பாரதி, கவிமணி, ராஜாஜி, காந்திஜி, ஆகியோர் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது. டி.கே.சி.யுடன் தொடர்பு கொண்டிருந்த கல்கி, ஐஸ்டிஸ் மகராஜன், வித்வான் சண்முகசுந்தரம், டி.டி. திருமலை, கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ம.பொ.சி., தி.க.சி. முதலானோர் […]

Read more