குருவிக்கூடு

குருவிக்கூடு, கோவன் பதிப்பகம், சென்னை, விலை120ரூ.

பத்திரிகைகளில் சிறுகதை வெளிவருவது குறைந்துவிட்டது. ஆனால் சிறுகதை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை. அப்படிப்ட்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியும், தெவிட்டாத இன்பமும் அளிக்கக்கூடியது பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான முகிலை இரா. பாண்டியனின் குருவிக்கூடு சிறுகதைத் தொகுதி. கதைகள் ஒவ்வொன்றும் மனதை வருடுகின்றன. எனினும் பாரம் என்ற சிறுகதை புதிய உச்சத்தைத் தொடுகிறது. ஜான் என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பற்றிய கதை. பிறருக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட தங்களுக்கு இக்குழந்தை ஏன் பிறந்தது? தங்களுக்குப் பின் அக்குழந்தையைக் காக்கப்போவது யார் என்று பெற்றோர் வேதனைப்படுகிறார்கள். இதுபற்றி, பாதிரியாரிடம் அவர்கள் தங்கள் மனக்குறையை கூற, அவர் அளிக்கும் விளக்கங்கள் மனதை நெகிழச்செய்கின்றன. இத்தகைய சிறப்பைப் பெற்றதால்தான், சாகித்ய அகாடமி சிறுகதை வாசிப்பில் இக்கதை இடம் பெற்றிருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 18/2/2015.  

—-

தந்திரா, எஸ். குருபாதம், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 150ரூ.

உங்கள் உடலை கவனித்துக் கேளுங்கள். உடலுக்குள்ளே மகத்தான ஞானம் இருக்கிறது. அதன்படி சென்றால் எப்போதும் சரியாகத்தான் இருப்பீர்கள் என்கிற இந்த நூல், வாழ்வியலில் ஏற்படக்கூடிய பல சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 18/2/2015.

Leave a Reply

Your email address will not be published.