ஹாலிவுட் பிரபலங்கள்
ஹாலிவுட் பிரபலங்கள், கண்ணம்மா பதிப்பகம், புதுச்சேரி, விலை 120ரூ.
சினிமா கண்டுபிடிக்கப்பட்டு 120 ஆண்டுகள் ஆகின்றன. படத் தயாரிப்பில், உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்பவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் என்ற சினிமா நகரை உருவாக்கி, பல ஸ்டுடியோக்களை அமைத்து, படங்களை தயாரித்தனர். ஹாலிவுட் அளித்த நடிகர் – நடிகைகள் உலகப்புகழ் பெற்று விளங்கினர். அவர்களில் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ, மார்லின் மன்றோ, எலிசபெத் டெய்லர், புரூஸ் லீ, ஜாக்கிசான் உள்பட 30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஹாலிவுட் உருவான வரலாற்றை முதல் அத்தியாயம் விவரிக்கிறது. தெளிந்த நீரோடை போன்ற நடையில், அருமையாக இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள ஆர்.மணவாளன் பாராட்டுக்குரியவர். புதுவை அரசின் நிதி உதவியுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்களைப் பற்றி அறிந்த கொள்ள சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 18/2/2015.
—-
பாரதிதாசனின் பன்முக ஆளுமை, காவ்யா, சென்னை, விலை 220ரூ.
பாரதிதாசனின் பன்முக ஆளுமை என்னும் தலைப்பின் கீழ் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆகியோரால் ஆராயப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். பாவேந்தரின் மொழிநடை, இயற்கை, மொழிபெயர்ப்பு, பெண்ணியச் சிந்தனைகள், குடிஅரசு இதழும் பாரதிதாசன் கவிதைகளும் என்னும் தலைப்புகளில் அமைந்த இக்கட்டுரைகளை தொகுத்தளித்திருக்கிறார் முனைவர் அ.கோவிந்தராசன். நன்றி: தினத்தந்தி, 18/2/2015.