திருக்குறள் தெளிவுரை

திருக்குறள் தெளிவுரை, முகிலை இராசபாண்டியன், முக்கடல், விலைரூ.100. திருக்குறளுக்கு உரை எழுதியோர் விபரம் எண்ணிக்கையில் அடங்காது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு உரை வெளியாகியிருக்கும். அவற்றுள் சற்று மாறுபட்டிருக்கிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பாளர்கள் என முன்னுரையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. எளிதில் படித்துப் பொருள் அறிந்து கொள்ளும் வகையில் பதம்பிரித்து வெளியிட்டிருப்பதுடன் எளிமையான உரை விளக்கமாக உள்ளது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் ஓரளவு பொருள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 29/12/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார்,முகிலை இராசபாண்டியன், முக்கடல், விலைரூ.80 திருமாலின் அருள் பெற்ற பன்னிரு ஆழ்வார்களில் பெரிதும் கவரும் நன்கலியன் திருமங்கை ஆழ்வாரை படம் பிடித்துக் காட்டுகிறது. திருமால் பற்றிய அறிமுகம், ஆழ்வார்கள் பற்றிய ஆய்வுடன் துவங்குகிறார். பத்து ஆழ்வார்களுடன், மதுரகவியும், ஆண்டாளும் பின்னர் சேர்க்கப்பட்டனர் என்கிறார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், 3,776 பாடல்களே உள்ளதையும் கூறுகிறார். சோழன், வேல் வழங்கிய வரலாறு, நாகை, பொன் புத்தர் சிலையை, திருவரங்கம் திருப்பணிக்காக எடுத்தது, வாடினேன் வாடி வருந்தினேன் என்று பாடியது போன்ற அரிய செய்திகளால் நிரம்பியுள்ளது. மனம் […]

Read more

காலம் தந்த காமராசர்

காலம் தந்த காமராசர், முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. ஆறு வயதில் தந்தையை இழந்த ஏழைச் சிறுவன், இந்திய விடுதலைக்காக உழைத்து, அக்டோபர் மாதம் காந்தியடிகள் பிறந்த நாளில், உலக வாழ்வை துறந்தவரின் வரலாற்றை சொல்லும் நுால். முதல்வர் பதவியை துறந்து, நாட்டுக்காகப் பாடுபட்டவர் தான் கர்ம வீரர் காமராஜர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த நேருவுக்கு ஆலோசனை கூறும் திறனுடன் விளங்கினார். மூன்று முறை தமிழகத்தின் முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர். கடைசி […]

Read more

சுந்தரர்

சுந்தரர், முகிலை இராசபாண்டியன், ஞாலம் இலக்கிய இயக்கம், பக். 224, விலை 200ரூ. சேக்கிழார் படைத்த பெரிய புராணம், சுந்தரர் வாழ்க்கையுடன் தொடங்கி, சுந்தரர் வாழ்க்கையுடனே நிறைவடைகிறது. திருக்கயிலாயத்திற்குச் சுந்தரர் வருகிற காட்சியைக் கண்டதும், உபமன்னிய முனிவர் எழுந்து நின்று வணங்குகிறார். சிவபெருமானை மட்டுமே வணங்கும் உபமன்னிய முனிவர், இவரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறாரே என்று, அவரது சீடர்கள் கேட்கின்றனர். அவர்களிடம், இவர் தான் சுந்தரர். சிவபெருமானின் மறுவடிவம் தான் சுந்தரர். அடியார்கள் அந்தச் சுந்தரரின் வரலாற்றை கேட்கின்றனர். அவர்களுக்கு அந்த வரலாற்றை […]

Read more

சுந்தரர்

சுந்தரர், முகிலை இராசபாண்டியன், ஞாலம் இலக்கிய இயக்கம், விலை 200ரூ. சேக்கிழார் படைத்த பெரிய புராணம், சுந்தரர் வாழ்க்கையுடன் தொடங்கி, சுந்தரர் வாழ்க்கையுடனே நிறைவடைகிறது. திருக்கயிலாயத்திற்குச் சுந்தரர் வருகிற காட்சியைக் கண்டதும், உபமன்னிய முனிவர் எழுந்து நின்று வணங்குகிறார். சிவபெருமானை மட்டுமே வணங்கும் உபமன்னிய முனிவர், இவரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறாரே என்று, அவரது சீடர்கள் கேட்கின்றனர். அவர்களிடம், இவர் தான் சுந்தரர். சிவபெருமானின் மறுவடிவம் தான் சுந்தரர். அடியார்கள் அந்தச் சுந்தரரின் வரலாற்றை கேட்கின்றனர். அவர்களுக்கு அந்த வரலாற்றை கூறுவது போல் […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை […]

Read more

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 56, விலை 50ரூ. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. அதில் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் வகையில் அமைந்துள்ள நூல் இது. திண்ணன் எனும் இயற்பெயர் கொண்ட கண்ணப்ப நாயனாரின் பிறப்பிடமான பொத்தப்பி நாடும், காளத்தி மலையும் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றன என்பதையும், வேட்டுவர்களின் வாழ்க்கையையும் இந்த நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது. வேட்டுவச் சிறுவர்களுக்கு வில் வித்தை துவங்கும் போது, அக்காலத்தில் […]

Read more

உகரச்சுட்டு

உகரச்சுட்டு, முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பாலாஜி நகர், புழுதிவாக்கம், சென்னை 91, பக். 112,விலை 80ரூ. தமிழ்மொழியில் அ, இ, உ என மூன்ற சுட்டெழுத்துக்கள் உள்ளன, இந்தியாவில் உள்ள பிற மொழிகளில் அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. அ என்னும் சுட்டெழுத்து அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும் இ என்னும் சுட்டெழுத்து இவன் இவ்வீடு என அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். உ என்னும் சுட்டெழுத்து தற்காலத்தில் பேசப்படுவதில்லை. உ என்னும் சுட்டெழுத்து தொலைவுக்கும் அருகுக்கும் […]

Read more