திருமங்கை ஆழ்வார்
திருமங்கை ஆழ்வார்,முகிலை இராசபாண்டியன், முக்கடல், விலைரூ.80
திருமாலின் அருள் பெற்ற பன்னிரு ஆழ்வார்களில் பெரிதும் கவரும் நன்கலியன் திருமங்கை ஆழ்வாரை படம் பிடித்துக் காட்டுகிறது. திருமால் பற்றிய அறிமுகம், ஆழ்வார்கள் பற்றிய ஆய்வுடன் துவங்குகிறார். பத்து ஆழ்வார்களுடன், மதுரகவியும், ஆண்டாளும் பின்னர் சேர்க்கப்பட்டனர் என்கிறார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், 3,776 பாடல்களே உள்ளதையும் கூறுகிறார்.
சோழன், வேல் வழங்கிய வரலாறு, நாகை, பொன் புத்தர் சிலையை, திருவரங்கம் திருப்பணிக்காக எடுத்தது, வாடினேன் வாடி வருந்தினேன் என்று பாடியது போன்ற அரிய செய்திகளால் நிரம்பியுள்ளது. மனம் கவரும் திருமங்கை ஆழ்வார் அறிமுக நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்.
நன்றி: தினமலர், 7/2/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818