எனைத்தானும் நல்லவை கேட்க

எனைத்தானும் நல்லவை கேட்க, டாக்டர் பொற்கோ, இசையமுது பதிப்பகம், விலைரூ.360

தமிழர் வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிய, 81 கட்டுரைகளின் தொகுப்பு நுால். நல்லவற்றைக் கேட்கவேண்டும், படிக்கவேண்டும், செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. சான்றோன் இயல்பைச் சால்பு என்றும், சான்றோனாக இருக்க அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற நிலைகளைக் குறிப்பிட்டு வள்ளுவரின் வழிநின்று விளக்குகிறார்.

தமிழர்களின் கல்விப் பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழமையானது என்பதை ஆய்வுரையில் விளக்குகிறார். கணக்காயர், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழறிஞர்கள் புலமை பெற்று விளங்கியதைத் தொல்காப்பிய வழிநின்று உணர்த்துகிறார்.

பெண்ணடிமைக்கு ஆட்படாத தமிழகம், தமிழக வரலாற்றில் பெண்கள் என்னும் ஆய்வுரையில் செம்பியன் மாதேவி, குந்தவை நாச்சியார் இருவரும் சோழப் பேரரசின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்ததையும், சங்ககாலப் பெண்களின் நிலை உயர்ந்திருந்ததையும் உணர்த்துகிறார். இளைய சமுதாயம் கற்றுணர்ந்தால் சால்புடையவர்களாவது உறுதி.

– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

நன்றி: தினமலர், 7/2/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031007_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.