மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார், முகிலை ராசபாண்டியன், முக்கூடல், பக். 64, விலை 60ரூ. நம்மாழ்வாரை மட்டுமே பாடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானவர் மதுரகவி ஆழ்வார். சாதி வேற்றுமைக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதை உணர்ந்து, உணர்த்தியவர். அதனால்தான், மன்னர் குலத்தில் உதித்த நம்மாழ்வாருக்குச் சீடரானார். அவரைப் போற்றி, ‘கண்ணி நுண் சிறுத்தரம்பு’ என்ற நூலையும் பாடினார். மதுரகவி ஆழ்வாரின் வரலாறு மிக எளிய நடையில் நூலாக்கப்பட்டுள்ளது. ஆழ்வார் வரலாற்று நூல்களில் தனிச்சிறப்புப் பெற்றது. நன்றி: தினமலர், 24/5/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

நம்மாழ்வார்

நம்மாழ்வார், முகிலை ராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 96, விலை 100ரூ. தற்போது துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்குருகூரில் தோன்றியவர் நம்மாழ்வார் என்னும் மாறன். இவரது காலத்திற்குப் பின், இந்த ஊர் ஆழ்வார்திருநகரி எனப் போற்றப்படுகிறது. குறுநில மன்னனான காரிக்கு மகனாகப் பிறந்தும், அரச வாழ்க்கையைத் துறந்து, திருக்குருகூரில் உள்ள ஆதிநாதர் கோவிலில் நிற்கும் புளிய மரத்தடியில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். யாரிடமும் பேசாமலும், எந்தச் செயலிலும் ஈடுபடாமலும் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரைப் பார்த்ததும் அசைந்து கொடுத்து அவரது கேள்விக்குத் தத்துவ விளக்கமாகப் […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை ராசபாண்டியன், முக்கடல், பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை வளர்த்தால் […]

Read more

குருவிக்கூடு

குருவிக்கூடு, முகிலை ராசபாண்டியன், கோவன் பதிப்பகம், சென்னை, பக். 158, விலை 120ரூ. பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், கதை வாசிப்பிலும் பயன்படுத்தப்பட்ட கதைகள் இவை. மனதில் சிந்தனை அலைகளை வெகுவாகத் தூண்டிவிடும் ஆற்றல் பெற்றவை. மனிதநேயம் பாதுகாக்கப்பட வேண்டும், மதங்கள் பாலங்களாக இருக்க வேண்டுமே தவிர, வேலிகளாக இருக்கக்கூடாது என வலியுறுத்தும் கதைகள். மதங்களைக் கடந்து மற்றும் சப்பரம் எடுப்பு, ஒரு சிறிய குழந்தையின் பெரிய மனதைச் சொல்வது, பொய் என்ற கதை. பாத்திரம் பார்த்து என்ற கதையும் மனிதம் பெரிதா, மதநேசம் பெரிதா என்ற […]

Read more

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷினி, மித்ரஸ் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. மனிதனாய், மாமனிதனாய் டி.கே.சி. தடம் பதித்த தன்மையைத் தடம் பதித்த மாமனிதன் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் தி. சுபாஷினி. டி.கே.சியும் சான்றோர்களும் என்னும் பகுதியில் டி.கே.சி.யால் மதிக்கப் பெற்ற வள்ளுவர், பாரதி, கவிமணி, ராஜாஜி, காந்திஜி, ஆகியோர் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது. டி.கே.சி.யுடன் தொடர்பு கொண்டிருந்த கல்கி, ஐஸ்டிஸ் மகராஜன், வித்வான் சண்முகசுந்தரம், டி.டி. திருமலை, கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ம.பொ.சி., தி.க.சி. முதலானோர் […]

Read more