குழந்தைகள் நலம்
குழந்தைகள் நலம், டாக்டர் க. ராஜேந்திரன், தமிழ்ப் பண்பாட்டு மையம், கோவை, பக். 380, விலை 200ரூ.
இந்த நூலில் ஆசிரியர், தாயின் கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு 18 வயது ஆகும் வரையிலும், சிசு வளர்ப்பு, உணவு முறைகள், தடுப்பு ஊசி, குழந்தையின் வளர்ச்சி நிலைகள், பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி, விரிவாக எளிதாகச் சொல்கிறார். விலையும் மலிவு. தாய்மார்கள் அவசியம் படிக்க வேண்டிய மருத்துவ நூல். -எஸ். குரு. நன்றி: தினமலர், 20/4/2014.
—-
ஜோதிட சகலாதிகாரம், புலிப்பாணி சுந்தரவரதாச்சார்யர், ஸ்ரீ ஆனந்த நிலையம், சென்னை, பக். 1034, விலை 600ரூ.
நட்சத்திரங்கள், கிரகங்கள், ராசிகள், கோசாரப் பலன்கள், கிரகங்களின் பார்வைப் பலன்கள், வாரம், திதி, நட்சத்திரம் ஆகியவற்றில் பிறந்தவர்களின் பலன்கள், ஆயுள் நிர்ணயம், 27 நட்சத்திரக்காரர்களின் பலன்கள், லக்கின பலன்கள் என ஜோதிடத்தின் முழுப் பரிமாணத்தையும் அலசி ஆராய்ந்து, படிப்போருக்குப் புரியவேண்டும் என்கிற சிரத்தையுடன் படைத்துள்ளார் நூலாசிரியர். அச்சிட்டதிலும் பெரிய எழுத்திலும் அட்டை வடிவமைப்பிலும் பிரமாண்டம் கூடுதலாகத் தெரிகிறது. நன்றி: சக்தி விகடன், 22/1/13.